இந்திய ரயில்வே துறையில் 5G சேவைகள் : ஒப்புதல் வழங்கியது மத்திய அமைச்சரவை.!

இந்தியாவில் ஒருபுறம் தொற்று நோயின் தாக்கம் குறைந்து வருவதன் காரணமாக மக்கள் மத்தியில் ஒருவித நிம்மதி ஏற்பட்டுள்ளதாகத் தெரிய படுகிறது. இருந்தாலும் பாதுகாப்பு நடவடிக்கைகளை அனைவரும் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்றும் அரசின் சார்பாக கேட்டுக் கொள்ளப்பட்டது. குறிப்பாக பிரதமர் தலைமையில் சில தினங்களுக்கு முன்பு அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. அதில் மக்கள் அனைவருக்கும் தீபாவளி வரை இலவச ரேஷன் பொருட்கள் மற்றும் இலவச தடுப்பூசிகள் அனைவருக்கும் செலுத்துவதில் அரசாங்கம் தற்போது கவனம் கொண்டுள்ளது.
குறிப்பாக முன்னேற்றத்தில் அரசாங்கம் பின் வாங்குவது இல்லை என்பதற்கு உதாரணமாக ரயில்வே துறையில் தற்போது 5G சேவை வழங்க மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், ரயில்வே துறையில் 5G சேவை வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில், இந்திய மக்கள் அதிக அளவில் உபயோகப்படுத்தும் போக்குவரத்து சாதனங்களில் ரயில்வே எப்பொழுதும் இருந்து வருகிறது.
ஆகவே ரயில்வே துறையை பெரிய அளவில் எடுத்துக் கொண்டு செல்வதற்கும் அவற்றில் உள்ள சேவைகளை உருவாக்குவதன் மூலம் முடியும் என்பதை அரசாங்கம் உணர்ந்துள்ளது. ரயில் நிலையங்கள், ரயில் சேவை, மக்களின் பாதுகாப்பு உள்ளிட்ட பயன்பாட்டிற்காக ரயில்வே துறையில் 5G இணையதள சேவை வழங்க திட்டமிட்டுள்ளது. ரூ.25,000 கோடி செலவில் 5 ஆண்டுகளுக்குள் இந்த திட்டத்தை முடிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.