Kathir News
Begin typing your search above and press return to search.

இந்திய விமானப்படையின் பலம் பன்மடங்கு உயர்வு: 6 ரபேல் போர் விமானங்கள் வருகை!

இந்திய விமானப்படையின் பலம் பன்மடங்கு உயர்வு: 6 ரபேல் போர் விமானங்கள் வருகை!

Bharathi LathaBy : Bharathi Latha

  |  18 April 2021 12:43 PM GMT

நான்காவது முறையாக ஏப்ரல் 21 ம் தேதி பிரான்சில் இருந்து மேலும் 6 ரபேல் போர் விமானங்கள் இந்தியா வந்தடைகிறது. இந்திய விமானப்படை தளபதி R.K.S பதாரியா ஏப்ரல் 20ம் தேதி முதல் பிரான்சிற்கு செல்லயிருக்கிறார். ஏப்ரல் 23ம் தேதி வரை அங்கு அவர் இருப்பார். 6 ரபேல் போர் விமானங்கள் முன்னதாக ஏப்ரல் 28 ம் தேதி அன்று இந்தியாவுக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டிருந்தன.

ஆனால் இந்திய விமானப்படை தளபதியின் பயணத்தை தொடர்ந்து இந்த நிகழ்ச்சி ஒரு வாரத்திற்கு முன்னதாக தள்ளி வைக்கபட்டது. ராகேஷ் படவுரியா பிரான்ஸ் பயணத்தின் போது பிரெஞ்சு ரபேல் படைப்பிரிவைப் பார்வையிடுகிறார். பாரிஸில் புதிதாக நிறுவப்பட்ட விண்வெளி கட்டளைக்கு செல்வார்.

இந்திய விமானப்படைத் தலைவர் ராகேஷ் படவுரியா ஏப்ரல் 21ம் தேதி தென்மேற்கு பிரான்சில் உள்ள மெரிக்னாக்-போர்டோ விமான நிலையத்திலிருந்து ஆறு ரபேல் போர் விமானங்கள் கொடியசைத்து இந்தியா அனுப்பி வைப்பார்.


6 ரபேல் விமானங்களும் மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள ஹசிமரா விமானப்படை தளத்தில் நிறுத்தப்பட உள்ளன. இதன்மூலம், இந்த மாதத்துக்குள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்ட ரபேல் விமானங்களின் எண்ணிக்கை 20 ஆக உயரும். மீதமுள்ள விமானங்களும் அடுத்த ஆண்டுக்குள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட உள்ளன.

இதன் மூலம், இந்தியாவிடம் விமானப்படை பெரும் பலத்தை பெறும் இந்திய விமானப்படையை பலப்படுத்துவதற்காக, பிரான்ஸ் நாட்டை சேர்ந்த டசால்ட் நிறுவனத்திடம் இருந்து 36 அதிநவீன ரபேல் போர் விமானங்கள் ரூ.56 ஆயிரம் கோடி செலவில் வாங்கப்படுகிறது. இதற்கான ஒப்பந்தம் 2016ல் போடப்பட்டது. இதன்படி, ஏற்கனவே 11 ரபேல் விமானங்கள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டன. இவை தற்போது, அரியானாவில் உள்ள அம்பாலா விமானப்படை தளத்தில் நிறுத்தப்பட்டு உள்ளன.


கிழக்கு லடாக்கில் சீனாவுடன் சமீபத்தில் போர் பதற்றம் ஏற்பட்ட போது, இந்த விமானங்கள் கண்காணிப்புக்காக பயன்படுத்தப்பட்டன. இந்நிலையில், ஏற்கனவே ஒப்புக் கொள்ளப்பட்டபடி 4வது தொகுதி 3 ரபேல் விமானங்களை இந்தியாவிடம் பிரான்ஸ் ஒப்படைத்தது. கடந்த சிலவாரங்களுக்கு முன் இந்தியா வந்தடைந்தன.

இந்த 3 விமானங்களுடன் சேர்த்து நம் விமானப் படையில் ரபேல் போர் விமானங்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. ஐந்து ரபேல் ஜெட் விமானங்களின் முதல் தொகுதியாக ஜூலை 29 அன்று இந்தியா வந்து சேர்ந்தது. நவம்பர் 3ம் தேதி மூன்று ரபேல் ஜெட் விமானங்களின் இரண்டாவது தொகுதியாக இந்தியாவுக்கு வந்தது. மூன்றாவது தொகுதியாக ஜனவரி 27ம் தேதி வந்து சேர்ந்தது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News