Kathir News
Begin typing your search above and press return to search.

காலையிலிருந்து 70 நபர்கள் இறந்து விட்டதாக மக்களை நம்ப வைத்த பெண் பத்திரிக்கையாளர் - ஆதாரம் கேட்டதும் பிடித்த ஓட்டம்!

காலையிலிருந்து 70 நபர்கள் இறந்து விட்டதாக மக்களை நம்ப வைத்த பெண் பத்திரிக்கையாளர் - ஆதாரம் கேட்டதும் பிடித்த ஓட்டம்!
X

MuruganandhamBy : Muruganandham

  |  30 April 2021 6:15 AM IST

14 ஆண்டுகள் பத்திரிகைத் துறையில் உள்ள ராணா அயூப் அரசியல் களத்தில் ஆதாரம் இல்லாத தகவல்களை பகிர்ந்து சர்ச்சை உண்டாக்கி வருகிறார்.

ஏற்கனவே காஷ்மீரில் நள்ளிரவு சோதனைகளில் பன்னிரண்டு வயது சிறுவர்கள் தடுத்து வைக்கப்பட்டு தாக்கப்பட்டுள்ளனர். பெண்கள் கற்பழிப்பு அச்சுறுத்தலுக்கு ஆளாகிறார்கள். சிறுவர்களுக்கு மின்அதிர்ச்சி கொடுக்கப்பட்டுள்ளது.

அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்பது அவர்கள் குடும்பத்திற்கு தெரியவில்லை என்று சர்ச்சையான கருத்துகளை கூறி, அதற்கான ஆதாரம் கேட்கப்பட்டவுடன் தலைமறைவானார்.

அதே போல கொரோனா விவகாரத்தையும் கையில் எடுத்து அரசுக்கு எதிராக சர்ச்சை மிகுந்த கருத்துகளை பரப்பி வருகிறார். ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக, உத்திரபிரதேச மாநிலம் அலிகாரில் காலையிலிருந்து 70 நபர்கள் இறந்து விட்டதாக தனது "உள்ளூர் நிருபர்" தெரிவிப்பதாக கூறியிருந்தார்.





உடனடியாக இந்த செய்திக்கு உத்திரபிரதேச முதல்வரின் முதன்மை செய்தி தொடர்பாளர் பதிலளித்துள்ளார் - இப்படியான தகவல்கள் ஏதுமில்லை, அவ்வாறு இருந்தால் அதனை சிரமம் கொண்டு பகிருமாறு தெரிவித்துள்ளார்.

அதற்கு இதுவரையில் ராணா அயூப் தரப்பில் இருந்து எந்த பதிலும் வரவில்லை. இது போன்ற தகவல்களை நம்பி தமிழகத்தில் நடிகர் சித்தார்த் மாதிரியான ஆட்கள் வானத்துக்கும் பூமிக்கும் குதிக்கின்றனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News