Kathir News
Begin typing your search above and press return to search.

உதான் திட்டத்தின் கீழ் 72 விமான நிலையங்கள், 2 நீரில் செல்லக்கூடிய 2 விமானங்கள்: மத்திய அரசின் அசத்தல் பிளான்!

உதான் திட்டத்தின் கீழ் 72 விமான நிலையங்கள், 2 நீரில் செல்லக்கூடிய 2 விமானங்கள்: மத்திய அரசின் அசத்தல் பிளான்!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  3 Feb 2023 9:55 AM IST

குறைந்த செலவில் விமானப் போக்குவரத்து சேவையை அனைத்து மக்களும் பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் தொடங்கப்பட்ட உதான் திட்டம் தற்போது தேவை அதிகமுள்ள வழித்தடங்களில் சேவைகளைத் தொடங்க விருப்பமுள்ள விமான நிறுவனங்கள், இது தொடர்பான ஏல நடவடிக்கைகளில் கலந்து கொள்ள வேண்டும், என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உதான் திட்டத்தின் கீழ் 459 வழித்தடங்களில் 72 விமான நிலையங்கள், 9 ஹெலிகாப்டர் தரையிறங்குத் தளம், நீரில் செல்லக்கூடிய 2 விமானங்கள் போன்றவை இந்தாண்டு ஜனவரி 30ல் செயல்பட ஆரம்பித்துள்ளது.

இதன் மூலம் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் இந்த சேவைகள் கிடைப்பதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதுவரையில் சுமார் 2.16 இலட்ச உதான் விமான சேவைகளில் 1.13 கோடிக்கும் அதிகமான பயணிகள் பயணம் செய்துள்ளனர்.

கடந்த 2014-15ம் நிதியாண்டு முதல் 2019-20ம் நிதியாண்டு காலத்தில் உள்நாட்டு விமான பயணிகள் போக்குவரத்து 14.5 சதவீத வளர்ச்சியை கண்டுள்ளது. 2020-21 மற்றும் 2021-22 ஆண்டுகளில் கொவிட் தொற்று காரணமாக உள்நாட்டு விமானப் போக்குவரத்து குறைவாக இருந்தது.

தற்போது, உள்நாட்டு விமானப் போக்குவரத்து நடப்பு நிதியாண்டில் (2022-23) மீண்டும் அதிகரித்துள்ளது. இது கொவிட் முந்தைய நிலையில் 97 சதவீதத்தை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விமானப் போக்குவரத்து உள்கட்டமைப்பை மேம்படுத்த அடுத்த 5 ஆண்டுகளில் சுமார் ரூபாய் 98 ஆயிரம் கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

Input From: NewsOnair

Next Story
கதிர் தொகுப்பு
Trending News