Kathir News
Begin typing your search above and press return to search.

இந்தியாவிற்கு உதவியாக ரூ740 கோடி மதிப்பிலான மருத்துவப் பொருட்களை அனுப்பிய அமெரிக்க அரசு!

இந்தியாவிற்கு உதவியாக ரூ740 கோடி  மதிப்பிலான மருத்துவப் பொருட்களை அனுப்பிய அமெரிக்க அரசு!
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  30 April 2021 5:45 PM IST

இந்தியாவிற்கு பல உலக நாடுகள் கொரோனாவிற்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவுடன் கைகோர்க்க பல உதவிகளை செய்து வருகின்றன. அத்தகைய நாட்டின் பட்டியலில் அமெரிக்காவும் தற்போது இணைந்துள்ளது. இந்தியா கொரோனா போராட்டத்தில் வெல்ல, அமெரிக்கா தனது வாழ்த்துக்களையும் தெரிவித்து உள்ளது.

அதற்காக அமெரிக்காவின் சார்பில் ரூபாய் 740 கோடி மதிப்பு அடங்கிய ஆக்சிஜன் சிலிண்டர்கள் மற்றும் மருத்துவ மூலப்பொருட்கள் மேலும் பல மருத்துவர் உபகரணங்களை அமெரிக்கா அனுப்பி வைத்தது. அவை இன்று அமெரிக்க விமானம் மூலம் டெல்லி வந்து அடைந்தது.


இந்தியா தற்பொழுது கொரோனா வைரசின் இரண்டாவது அலையை எதிர்த்துப் போராடி வருகிறது. மேலும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ள காரணத்தினாலும் ஆக்சிஜன் சிலிண்டர்கள், ரெம்டெசிவிர் மருந்து ஆகியவை அதிக அளவு தேவைப்படுகிறது. ஏனென்றால் கொரோனாவல் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க இவை இரண்டும் முக்கியம்.

இதுவே இந்தியாவில் மருந்துப் பொருட்களின் தேவை அதிகமாக இருக்க காரணத்தினால் இந்தியாவின் அண்டை நாடுகளான இங்கிலாந்து, சீனா, பாகிஸ்தான், ரஷ்யா உள்ளிட்ட 40-க்கும் அதிகமான உலக நாடுகள் இந்தியாவிற்கு அத்தகைய மருந்து பொருட்களை அளித்து வருகிறது.

அந்த வகையில், கொரோனா தொற்று கண்டறிவதற்கான 1 லட்சத்து 84 ஆயிரம் உபகரணங்கள், 20 ஆயிரத்துக்கும் அதிகமான ரெம்டெசிவிர் மருந்துகள், தடுப்பூசிக்கான மூலப் பொருட்கள், ஒரு லட்சம் N95 முகக்கவசங்கள் உள்ளிட்ட மருத்துவப் பொருட்களை அமெரிக்கா, இந்தியாவுக்கு அனுப்பியுள்ளது.


இதன் மொத்த மதிப்பு சுமார் 740 கோடி ரூபாயாகும். அமெரிக்காவின் இந்த உதவிப் பொருட்களுடன் அமெரிக்க விமானம், டெல்லி வந்தது. கொரோனா தொற்றால் அமெரிக்கா கடுமையாக பாதிக்கப்பட்ட போது இந்தியா தங்களுக்கு உதவியாக இருந்ததாகவும், கொரோனா தொற்றின் இரண்டாவது அலையால் பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவுக்கு தற்போது அமெரிக்கா உதவுவதாகவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News