இந்தியாவின் 75வது சுதந்திர தினம் எப்படி இருக்க வேண்டும்? : பிரதமர் மோடி!
By : Parthasarathy
இந்தியாவின் பாராளுமன்றத்தில் மழைக்கால கூட்ட தொடர் சில நாட்களுக்கு முன்பு தொடங்கியது. இந்த கூட்ட தொடர் தொடங்கிய முதல் இன்று வரை எதிர் கட்சிகள் பாராளுமன்றத்தில் பெகாசஸ் விவாகரம் தொடர்பாக தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். அது மட்டுமின்றி எதிர் கட்சிகள் செய்த அமளியால் பாரத பிரதமர் மோடி அவர்களால், புதிய அமைச்சர்களை பாராளுமன்றத்திற்கு அறிமுகம் கூட செய்து வைக்க முடியாத நிலை ஏற்பட்டது. எதிர் கட்சியின் இந்த கீழ்த்தரமான செயலை கண்டு புதிதாக நியமிக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட மற்றும் ஏழை எளிய அமைச்சர்கள் தங்களுக்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று மிகவும் வேதனை அடைந்தனர்.
இவ்வாறு இருக்கையில் நேற்று பா.ஜ.க - எம்.பி. க்கள் கூட்டம் டில்லியில் நடந்தது. இதில் அந்த கட்சியை சேர்ந்த அனைத்து அமைச்சர்களும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாரத பிரதமர் மோடி பேசுகையில் "இந்திய நாட்டின் 75 வது சுதந்திர தின கொண்டாட்டம் வெறும் அரசு நிகழ்ச்சியாக மட்டும் இருக்கக் கூடாது. அது மக்களின் பங்களிப்புடன் கூடிய மக்கள் இயக்கமாக இருக்க வேண்டும். பா.ஜ.க கட்சி - எம்.பி. க்கள் தங்கள் தொகுதியில் உள்ள ஒவ்வொரு கிராமத்திலும் சுதந்திர தின கொண்டாட்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.
இதற்காக ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் இரண்டு கட்சி நிர்வாகிகள் தலைமையில் குழு அமைக்க வேண்டும். அந்தக் குழுவினர் கிராமங்கள் தோறும் சுதந்திர தின கொண்டாட்ட நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ய வேண்டும். மேலும், 2047 ஆம் ஆண்டில் 100வது ஆண்டு சுதந்திர தினம் கொண்டாடும்போது இந்தியா எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து மக்களின் ஆலோசனை மற்றும் அறிவுரையை கேட்டு பதிவு செய்ய வேண்டும்." என்று பிரதமர் மோடி பேசினார்.