Kathir News
Begin typing your search above and press return to search.

மோடி ஆட்சியில் 80,000 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் - இலக்கை தாண்டி அபார சாதனை!

மோடி ஆட்சியில் 80,000 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் - இலக்கை தாண்டி அபார சாதனை!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  29 Dec 2022 7:03 AM IST

மோடி தலைமையிலான அரசு கடந்த எட்டரை ஆண்டுகளில் இளைஞர்களின் சிறப்பான எதிர்காலத்திற்கான பல்வேறு வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது: மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.

2014-ஆம் ஆண்டு மக்கள் நிலையான அரசை தேர்வு செய்ததாக கூறிய அவர், இது கொள்கைகளில் நிலைத்தன்மையையும் மாற்றத்திற்கான வலுவான அடித்தளத்தையும் ஏற்படுத்தியதாகத் தெரிவித்தார்.

2014-ஆம் ஆண்டில் நாட்டில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை 350-ஆக இருந்தது என்றும் தற்போது அது 80,000-ஐ கடந்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். தற்போதைய மத்திய அரசு இளைஞர்களுக்கு திறன் பயிற்சி அளிப்பதையும், புதிய தொழில்பயிற்சி நிலையங்களை ஏற்படுத்துவதையும் உயர் முன்னுரிமையாகக் கொண்டு செயல்படுவதாக அவர் கூறினார்.

1950-ம் ஆண்டு நாட்டின் முதல் தொழிற்பயிற்சி நிலையம் (ஐடிஐ) ஏற்படுத்தப்பட்டதாகத் தெரிவித்த அவர், அதன் பின்னர் 2014-ஆம் ஆண்டு வரை மொத்தம் 10,000 தொழிற்பயிற்சி நிறுவனங்கள் திறக்கப்பட்டிருந்ததாக கூறினார்.

கடந்த 8 ஆண்டுகளில் மட்டும் புதிதாக 5,000 தொழிற்பயிற்சி நிலையங்கள் நாட்டில் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார். இதன் மூலம், கடந்த 8 ஆண்டுகளில் புதிதாக 4 லட்சம் இடங்கள் ஐடிஐ-களில் உருவாக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

நாட்டின் வெற்றியில், தொழிற்பயிற்சி நிலையங்கள் முக்கிய பங்காற்றுவதாக அவர் தெரிவித்தார். செயற்கை நுண்ணறிவு, ரோபோட்டிக்ஸ், முப்பரிமாண அச்சிடுதல், ட்ரோன் தொழில்நுட்பம், தொலைமருத்துவம் உள்ளிட்ட புதிய படிப்புகள் ஐடிஐ-களில் கற்பிக்கப்படுவது மகிழ்ச்சி அளிப்பதாகவும் ஜிதேந்திர சிங் கூறினார்.

input from: pib


Next Story
கதிர் தொகுப்பு
Trending News