Kathir News
Begin typing your search above and press return to search.

ஜமாத் இ-இஸ்லாமி பயங்கரவாத அமைப்புக்கு சொந்தமான ரூ.90 கோடி சொத்து பறிமுதல் - காஷ்மீர் புலனாய்வு துறை அதிரடி!

ஜமாத் இ-இஸ்லாமி பயங்கரவாத அமைப்புக்கு சொந்தமான ரூ.90 கோடி சொத்து பறிமுதல் - காஷ்மீர் புலனாய்வு துறை அதிரடி!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  30 Nov 2022 2:43 AM GMT

தடை செய்யப்பட்ட அமைப்பான ஜமாத் இ-இஸ்லாமி அமைப்புக்குச் சொந்தமான 11 சொத்துகளை கண்டறிந்து பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஜமாத் இ-இஸ்லாமி என்பது ஜம்மு-காஷ்மீரில் செயல்பட்டு வந்த மிகப்பெரிய அரசியல், மத அமைப்பாகும். தீவிரவாதத்தை ஆதரித்து வந்த தால் இந்த அமைப்பு 2019-ல் தடை செய்யப்பட்டது.

ஜம்மு-காஷ்மீர் அனந்தநாக் மாவட்டத்தில் அந்த அமைப்புக்குச் சொந்தமான ரூ.90 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டது. ஜம்மு-காஷ்மீரில் ஜமாத்துக்கு சொந்தமான 200க்கும் மேற்பட்ட சொத்துகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

இந்த மாத தொடக்கத்தில் 2 பள்ளி கட்டடங்கள் உள்பட ஷோபியான் மாவட்டத்தில் அந்த அமைப்புக்குச் சொந்தமான 9 சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டன.

Input From: NDTV

Next Story
கதிர் தொகுப்பு
Trending News