Kathir News
Begin typing your search above and press return to search.

அசாம் தேர்தல்: 90+ இடங்களில் வெற்றி பெறும் என்டிஏ - அமித் ஷா நம்பிக்கை!!

அசாம் தேர்தல்: 90+ இடங்களில் வெற்றி பெறும் என்டிஏ - அமித் ஷா நம்பிக்கை!!
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  31 March 2026 4:35 PM IST

அசாம் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான என்டிஏ 90-க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்று, மூன்றாவது முறையாக ஆட்சியைத் தக்கவைக்கும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.


அசாம் மாநிலத்துக்கு வருகை தந்த அவர், குவாஹாட்டியில் பிரம்மாண்டமான சாலைப் பேரணியைத் தொடங்கி வைத்தார். அதன்பின்னர் செய்தியாளர்களிடம் அசாம் மக்கள் தொடர்ந்து மூன்றாவது முறையாக என்டிஏ அரசை தேர்ந்தெடுப்பதில் மிகுந்த ஆர்வத்துடன் இருப்பதாக கூறினார்.


அசாம் மாநில சட்டப்பேரவைக்கு வாக்குப்பதிவு ஏப்ரல் 9-ம் தேதியும், வாக்கு எண்ணிக்கை மே 4-ம் தேதியும் நடைபெறவுள்ளன. தற்போதுள்ள சட்டப்பேரவையில் பா.ஜ.க.வுக்கு 64 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News