Kathir News
Begin typing your search above and press return to search.

இண்டர்நெட் இணைப்பு தருவதாக வாடிக்கையாளர்களை ஏமாற்றுகின்றன போலி இணையதளங்கள் - BSNL விடுக்கும் எச்சரிக்கை!

இண்டர்நெட் இணைப்பு தருவதாக வாடிக்கையாளர்களை ஏமாற்றுகின்றன போலி இணையதளங்கள் - BSNL விடுக்கும் எச்சரிக்கை!

MuruganandhamBy : Muruganandham

  |  17 April 2021 1:15 AM GMT

பிஎஸ்எல்எல் நிறுவனம் வீடுகளுக்கு பைபர் இணைப்புகளை (FTTH) வழங்கி வருகிறது. இது மிகவும் பிரபலம் அடைந்துள்ளதால், இந்த பைபர் இணைப்பு வழங்கும் வர்த்தகத்தில் பிஎஸ்என்எல் நிறுவனத்துடன் இணைந்து செயல்படுவதாகச் சொல்லி, வாடிக்கையாளர்களை ஏமாற்றும் நடவடிக்கையில் போலி நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளதாக பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு பல புகார்கள் வந்துள்ளன.

மேலும், இந்த போலி இணையதளங்கள், பாரத் பைபர் சர்வீஸ் இணைப்புகளை நேரடியாக வழங்குவதாகக் கூறி, நெட் பேங்கிங், யுபிஐ போன்ற ஆன்லைன் வசதிகள் மூலமாக முன்பணம் செலுத்தும்படியும் வாடிக்கையாளர்களிடம் கூறுகின்றன. புதிய இணைப்புக்கு ஆன்லைன் மூலம் பதிவு செய்ய, பணம் எதுவும் பிஎஸ்எஸ்எல் நிறுவனம் கேட்கவில்லை.

வாடிக்கையாளர்கள் மற்றும் பிஎஸ்என்எல் நிறுவனத்துடன் இணைந்து வர்த்தகம் செய்ய விரும்பும் தொழில்முனைவோரை தொடர்பு கொள்ள பிஎஸ்என்எல் அனைத்து முயற்சிகளையும் எடுக்கிறது. இது போன்ற போலி நிறுவனங்கள் கூறுவதைக் கேட்டு ஏமாற வேண்டாம் என பிஎஸ்எல்எல் கேட்டுக் கொள்கிறது.

அங்கீகாரமற்ற யூ-ட்யூப் வீடியோக்களை நம்ப வேண்டாம் எனவும் வாடிக்கையாளர்கள் அறிவுறுத்தப்படுகின்றனர். பிஎஸ்என்எல் நிறுவனத்துடன் இணைந்து வர்த்தகம் செய்ய விரும்புவர்கள், வாய்ப்புகளை அறிந்துகொள்ளவும், விவரங்களை அறியவும் பிஎஸ்என்எல் அலுவலகத்துக்குச் செல்ல வேண்டும் அல்லது பிஎஸ்என்எல் நிறுவனத்தின் இணையதளத்தை www.bsnl.co.in என்ற முகவரியில் பார்க்கலாம்.

புதிய எப்டிடிஎச் இணைப்புக்கு பதிவு செய்ய பிஎஸ்என்எல் நிறுவனத்தின் பிரத்யேக எப்டிடிஎச் இணையதளம் https://bookmyfiber.bsnl.co.in என்ற இணையளத்தைப் பயன்படுத்த வேண்டும்.

வாடிக்கையாளர்களுக்கு ஏதாவது சந்தேகம் என்றால் பிஎஸ்என்எல் செல்போன் மற்றும் லேண்ட்லைனிலிருந்து 1500 என்ற எண்ணையும், பிற நிறுவனங்களின் செல்போன் மற்றும் லேண்ட்லைனிலிருந்து 1800-345-1500 என்ற எண்களை தொடர்பு கொள்ளும்படி பிஎஸ்என்எல் நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News