Kathir News
Begin typing your search above and press return to search.

உலக நாடுகள் திணறிக்கொண்டிருக்க சிம்பிளா பவுடர் வடிவ மருந்தில் வேலையை முடித்த இந்தியா - DRDO கண்டுபிடித்த கொரோனா மருந்து விரைவில் அறிமுகம்!

உலக நாடுகள் திணறிக்கொண்டிருக்க சிம்பிளா பவுடர் வடிவ மருந்தில் வேலையை முடித்த இந்தியா - DRDO கண்டுபிடித்த கொரோனா மருந்து விரைவில் அறிமுகம்!
X

MuruganandhamBy : Muruganandham

  |  16 May 2021 6:45 AM IST

டிஆர்டிஓ கண்டுபிடித்த 2-டிஜி மருந்து கரோனா நோயாளிகளுக்கு சிறப்பாகச் செயல்படுகிறது, ஆக்சிஜனை நம்பி இருக்கும் நோயாளிகளுக்கு நல்ல பலன் அளிக்கிறது, ஆக்சிஜனைச் சார்ந்து இருக்கும் நோயாளிகள் விரைவில் இல்லாமல் மீள்கின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, கடந்த 1-ம் தேதி டிஆர்டிஓ தயாரித்த 2-டிஜி மருந்தை அவசர காலத்துக்குப் பயன்படுத்திக் கொள்ள டிசிஜிஐ அனுமதி அளித்துள்ளது. இந்த மருந்து பவுடர் வடிவில் இருப்பதால், தண்ணீரில் கலந்து குடிக்க முடியும்.

இந்த மருந்து உடலில் சென்று வைரஸால் பாதிக்கப்பட்ட செல்களை அடையாளம் கண்டுபிடித்து ஒருங்கிணைத்து, புதிதாக எந்த செல்களும் பாதிக்கப்படாமல் தடுத்து, வைரஸ் வளர்ச்சியையும் தடுக்கிறது.

இந்த மருந்து குறித்து டிஆர்டிஓ அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், "டிஆர்டிஓ அமைப்பு தயாரித்த பவுடர் வடிவ கரோனா தடுப்பு மருந்து 2டிஜி மருந்து அடுத்த வாரம் முறைப்படி அறிமுகமாகிறது.

தண்ணீர் கலந்து குடிக்கும் இந்த பவுடர் வடிவ மருந்து முதல் கட்டமாக 10 ஆயிரம் டோஸ்கள் வெளியிடப்பட்டு கரோனா நோயாளிகளுக்கு வழங்கப்படும்.

2020 டிசம்பர் முதல் 2021 மார்ச் வரை 27 கோவிட் மருத்துவமனைகளில் உள்ள 220 கரோனா நோயாளிகள் மீது பரிசோதிக்கப்பட்டது.இந்த ஆய்வில் மருந்தின் மூலக்கூறுகள் கரோனா வைரஸுக்கு எதிராகச் சிறப்பாகச் செயல்பட்டன.

கிளினிக்கல் பரிசோதனையில் பெறப்பட்ட முடிவுகள் அனைத்தும் டிசிஜிஐ அமைப்பில் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கான உற்பத்தியில் மருந்து நிறுவனங்கள் தீவிரமாக இறங்கியுள்ளன.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News