இந்திய பொருளாதாரத்தின் ஒரு மைல் கல்லாக அமைந்தது GST : பிரதமரின் பெருமிதம்!

By : Bharathi Latha
GST என்று அழைக்கப்படும் சரக்கு மற்றும் சேவை வரி வணிக நடவடிக்கைகளை வெளிப்படைத் தன்மையை உருவாக்கி உள்ளது. இதன் மூலம் சாதாரண மக்கள் தாங்கள் வாங்கும் பொருட்களுக்கு எவ்வளவு பணத்தை வரியாகச் செலுத்துகிறார்கள்? என்பதை துல்லியமாக அறிந்து கொள்ள முடிகிறது. GST அமல்படுத்தி தற்பொழுது 4 ஆண்டுகள் நிறைவடைந்த தொடர்ந்து இது இந்திய பொருளாதாரத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது என்று சொல்லலாம்.
மத்திய அரசு GST அமல்படுத்தி 4 ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், "இந்தியாவின் பொருளாதார அமைப்பில் GST மைல்கல்லாக இருந்து வருகிறது. மேலும் இது சாதாரண மனிதர்கள் மீதான வரிச்சுமையை குறைத்துள்ளதுடன், வெளிப்படைத் தன்மையை அதிகரித்து உள்ளது" எனப் பதிவிட்டுள்ளார்.
மத்திய அரசு மற்றும் பிரதமர் மோடி அவர்களின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தை 2015ம் ஆண்டு ஜூலை 1ம் தேதி துவக்கி வைத்தார். இத்திட்டம் துவங்கப்பட்டு ஆறு ஆண்டுகள் நிறைவு செய்வதையொட்டி மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தால் சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று டிஜிட்டல் இந்தியா திட்ட பயனாளிகளுடன் உரையாடவுள்ளார். இந்திய பொருளாதாரத்தின் மைல்கல்லை ஏற்படுத்திய GST வருங்கால இந்தியாவில் ஒரு புதிய மாற்றத்தை கொண்டு வரும் என்று எதிர்பார்க்கலாம்.
