இந்தியாவில் கொரோனாவால் கர்ப்பிணி பெண்கள் அதிகம் பாதிப்பு - ICMR அதிர்ச்சி தகவல்!

இந்திய நாட்டில் தற்பொழுது கொரோனாவின் இரண்டாம் நிலை தாக்கம் குறைந்து வருகிறது. ஆனால் இருந்தாலும், இந்த இரண்டாவது அலை காரணமாக கர்ப்பிணி பெண்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர் என ICMR அறிக்கையில் இதுபற்றி தெரிவிக்கின்றது. கொரோனா இரண்டாவது அலையில் கர்ப்பிணி பெண்கள் 387 பேருக்கு நோய் பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. அதில் 111 கர்ப்பிணி பெண்களுக்கு தொற்று பாதிப்பு அதிகமாக இருந்ததாக என்று ICMR அறிக்கை மேலும் கூறுகிறது.
மேலும் இதுபற்றி அறிக்கையில் கூறுகையில், முதல் அலை காரணமான அப்போது சுமார் 1,143 கர்ப்பிணி பெண்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டதாக அறிக்கை தெரிவிக்கின்றது. இவர்களில் 162 பெண்களுக்கு மட்டுமே, அதாவது 14.2 சதவீத பெண்களுக்கு தொற்று அறிகுறிகள் அதிகம் இருந்ததாகவும் அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதேபோல், முதல் அலையில் கர்ப்பிணி பெண்களின் இறப்பு சதவீதம் 0.7 ஆக இருந்ததாகவும், இரண்டாம் அலையில் இதுவரை இறப்பு சதவிகிதம் 5.7 ஆக பதிவாகி உள்ளதாகவும் கூறப்பட்டு உள்ளது.
தற்போது உள்ள இரண்டாவது அலைகளில் இதுவரை சுமார் 1,530 கர்ப்பிணி பெண்கள் பாதிக்கப்பட்டு, 30 பேர் உயிரிழந்து உள்ளதாகவும் ICMR அறிக்கை தெரிவிக்கிறது. இதன் மூலம், இந்தியாவில் கொரோனா தொற்றின் முதல் அலையை விட இரண்டாவது அலையில் கர்ப்பிணி பெண்கள் அதிக பாதிப்புகளும் இறப்பும் ஏற்பட்டுள்ளதாக ICMR தெரிவித்து உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.