முழுமையான பலன் பெற மூன்றாம் டோஸ் தடுப்பூசி கட்டாயம் தேவை - ICMR ஆய்வு!

By : Bharathi Latha
இந்தியாவில் தற்பொழுது உள்ள சூழ்நிலையை பொருத்தவரையில் அதிகமான நபர்களுக்கு 2 டோஸ் தடுப்பூசி மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கப்படவில்லை என்ற தகவல் மிகவும் அதிகமாக பேசப்படுகிறது மேலும் இத்தகைய நபர்களுக்கு மூன்றாம் டோஸ் தடுப்பூசி தேவையா? என்பது குறித்து பல்வேறு தரப்பில் ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், ICMR எனப்படும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் சமீபத்தில் நடத்திய ஆய்வில், இரண்டு டோஸ் தடுப்பூசி எடுத்துக் கொண்ட நபர்களிடம் 16% பேரின் உடலில் வைர எதிர்க்கும் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகவில்லை.
அதனால் 3வது டோஸ் தடுப்பூசி அவசியம் என்பது தெரிய வந்துள்ளது. கொரோனா தடுப்பூசி தொடர்பாக, ICMR விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வு குறித்த அறிக்கையில் இதுகுறித்து கூறுகையில், கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தப் பட்டோரிடம் ஆய்வு செய்யப் பட்டது. அதன்படி ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டோரில், 58.1 சதவீதம் பேரிடம், தற்போது பரவி வரும் டெல்டா வகை வைரசை எதிர்க்கும் நோய் எதிர்ப்பு சக்தி தென்படவில்லை. அதே நேரத்தில் இரண்டு டோஸ் எடுத்தவர்களில், 16.1 சதவீதம் பேரிடம் நோய் எதிர்ப்பு சக்தி தென்படவில்லை. அதாவது இவர்களது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி மிக குறைவாக இருக்கும்.
அது மற்ற நோய்களில் இருந்து அவர்களை காப்பாற்றும். இருப்பினும் முழுமையான பாதுகாப்பு மற்றும் பலன் ஆகியவற்றை பெறுவதற்கு மூன்றாவது டோஸ் செலுத்துவது சிறந்ததாக இருக்கும். அதே நேரத்தில் வைரஸ் தொற்று ஏற்பட்டு, அதன்பின் தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்களிடம், நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக உள்ளது. வைரஸ் பாதிப்பு ஏற்பட்டோருக்கு, ஒரு டோஸ் தடுப்பூசியே போதுமானதாக இருக்கும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
