இதை செய்தால் கொரோனா உயிர் இழப்புகளை குறைக்கலாம்: ICMR ஆய்வின் முடிவு!

By : Bharathi Latha
இந்தியாவைப் பொறுத்தவரை தற்போது இரண்டாம் அலை கொரோனா குறைய தொடங்கி உள்ள நிலையில் அடுத்து வர இருக்கும் மூன்றாம் அலையிலிருந்த மக்களை பாதுகாப்பது எப்படி என்பதை அரசாங்கம் யோசித்து வருகிறது.
இந்தியாவில் அடுத்தடுத்து வரவிருக்கும் அலைகளில் இருந்து மக்களைக் காப்பாற்றுவதற்காக மத்திய அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. மேலும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தொற்று நோயிலிருந்து மக்களை எப்படி பாதுகாப்பது? என்பது குறித்து ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. அதன் முடிவுகள் தற்போது வெளியிடப் பட்டுள்ளன.
இதில் ICMR தரப்பிலிருந்து கூறுகையில், இந்தியாவில் சுமார் 75% பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசிகளை செலுத்துவதின் மூலம் பாதிப்புகளை குறைக்க முடியும் என்று அது தெரிவித்துள்ளது. எனவே மத்திய அரசாங்கத்தின் துணையுடன் மாநில அரசாங்கங்கள் தற்போது தடுப்பூசி உள்ளதால் இது முழு முனைப்புடன் செயல்பட்டு வருகின்றன. அந்த வகையில் அடுத்து வரும் மாதத்தில் 75 சதவீத மக்களுக்கு தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தப்பட்டுவிட்டால் கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்புகள் குறைந்துவிடும் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்(ICMR) தெரிவித்துள்ளது.
எனவே ICMR இன் அறிவுரையின் படி செயல்பட்டால், கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்புகள் 37 சதவீதமாக குறையும் என்றும் கூறப்பட்டுள்ளது. ஆனால் மக்கள் இதற்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பதன் மூலம்தான் இந்த முயற்சி கைகூடும் என்றும் ICMR தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. எனவே அந்தந்த மாநிலங்கள் இதற்கான விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
