Kathir News
Begin typing your search above and press return to search.

வெள்ளை பூஞ்சை அறிகுறிகள் ஆபத்தானது அல்ல : LNJP மருத்துவமனையின் டாக்டர் தகவல்.!

வெள்ளை பூஞ்சை அறிகுறிகள் ஆபத்தானது அல்ல : LNJP மருத்துவமனையின் டாக்டர் தகவல்.!
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  22 May 2021 6:05 PM IST

தற்பொழுது இந்தியாவில் வேகமாகப் பரவி வரும் தொற்று நோய்களுக்கு இடையே வரும் வெள்ளை பூஞ்சை நோய் அறிகுறிகள் ஆபத்தானது என்று செய்தி வேகமாக பரவி வருகிறது. டெல்லி அரசாங்கத்தால் நடத்தப்படும் LNJP சுமார் 1,500 படுக்கைகளைக் கொண்ட நாட்டின் மிகப்பெரிய கொரோனா மையங்களில் ஒன்றாக உள்ளது. வெள்ளை பூஞ்சை பற்றி டெல்லியிலுள்ள லோக் நாயக் ஜெய்பிரகாஷ் நாராயணன் மருத்துவமனையில்(LNJP) உள்ள MD டாக்டர். சுரேஷ்குமார் கூறுகையில், "வெள்ளை பூஞ்சை தொற்று என அழைக்கப்படும் ஆஸ்பர்ஜில்லோசிஸ், கருப்பு பூஞ்சை எனும் மியூகோர்மைகோசிஸ் அளவிற்கு ஆபத்தானது அல்ல" என்று கூறியுள்ளார்.


சரியான மருத்துவரை அணுகாமல் கொரோனா நோய்த்தொற்றுக்கு சிகிச்சையளிக்க ஸ்டெராய்டுகளை எடுப்பதை தவிர்க்குமாறு அவர் தனது ஆலோசனை வழங்கினார். மேலும் ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்வது நோய்த்தொற்றுக்கு எதிராக போராட நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் என்றும் கூறினார்.பீகாரின் பாட்னாவில் வெள்ளை பூஞ்சை நோயாளிகள் நான்கு பேர் பதிவாகியுள்ளனர். மியூகோர்மைகோசிஸ் அல்லது கருப்பு பூஞ்சை தொற்றுக்கான பாதிப்புகள் பல மாநிலங்களில் இருந்தும் பதிவாகின்றன. நீரிழிவு நோயால் பாதிக்கப்படுபவர்களுக்கும், நோயெதிர்ப்பு மண்டலங்களில் பிரச்சினை உள்ளவர்களுக்கும் இது ஆபத்தானது என்று கூறப்படுகிறது.


வெள்ளை பூஞ்சை, கருப்பு பூஞ்சை போல ஆபத்தானது அல்ல. இதற்கான சிகிச்சை 1 மாதங்களுக்கு தொடரலாம். எனவே ஆரம்பகால நோயறிதல் மிகவும் முக்கியமானது. உங்கள் மருத்துவரிடம் ஆலோசிக்காமல் கொரோனாவுக்கு சிகிச்சையளிக்க ஸ்டெராய்டுகளை எடுத்துக் கொள்ளாதீர்கள். பூஞ்சை நெரிசலான மற்றும் ஈரப்பதமான இடங்களில் வளர்கிறது. எனவே உங்கள் சுற்றுப்புறங்கள் தொடர்ந்து சுத்தம் செய்யப்படுவதை உறுதிசெய்து கொள்ளுங்கள். நாள் கணக்கில் குளிரூட்டப்பட்ட உணவுப் பொருட்களை உட்கொள்வதைத் தவிர்க்கவும். புதிய பழங்களை உண்ணவும். உங்கள் வீட்டில் சூரிய ஒளியை உட்புக விடவும். உங்கள் முககவசங்களை தினமும் கழுவி வர வேண்டும் என்று டாக்டர். சுரேஷ் மேலும் கூறினார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News