Kathir News
Begin typing your search above and press return to search.

பொதுத்துறை வங்கிகளின் அடுத்த டார்கெட் இதுதான்... MSME-க்கு அடித்த ஜாக்பாட்... மத்திய நிதியமைச்சர் சொன்னது என்ன?

பொதுத்துறை வங்கிகளின் அடுத்த டார்கெட் இதுதான்... MSME-க்கு அடித்த ஜாக்பாட்... மத்திய நிதியமைச்சர் சொன்னது என்ன?

Bharathi LathaBy : Bharathi Latha

  |  8 July 2023 5:31 AM GMT

2022-23-ம் நிதியாண்டில் பொதுத்துறை வங்கிகளின் செயல்பாடு குறித்த ஆய்வுக்கூட்டம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மத்திய நிதித்துறை இணையமைச்சர் டாக்டர் பகவத் கிசன்ராவ் கரத், பல்வேறு துறைகளின் செயலாளர்கள், பாரத ஸ்டேட் வங்கியின் தலைவர் தினேஷ் காரா மற்றும் பொதுத்துறை வங்கிகளின் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். 2023 மார்ச் மாதத்தில் பொதுத்துறை வங்கிகளின் மொத்த செயல்படாத சொத்துகள் 4.97 சதவீதமும், நிகர செயல்படாத சொத்துகள் 1.24 சதவீதமுதம் உயர்ந்துள்ளது.


2022-23-ம் நிதியாண்டில் பொதுத்துறை வங்கிகள் சுமார் ரூ.1.05 லட்சம் கோடி நிகர லாபத்தை ஈட்டியுள்ளன. இது 2013-14-ம் நிதியாண்டில் ஈட்டிய நிகர லாபத்தை விட சுமார் மூன்று மடங்காகும். ஒட்டுமொத்த நிலையைக் கருதும்போது, ஆரோக்கியமான நிதி நிலையுடன் எந்தவொரு பொருளாதார வீழ்ச்சியையும் தாங்கும் அளவுக்கு வங்கிகள் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் வங்கித்துறை பல்வேறு இடர்களைச் சந்தித்தாலும், இந்தியாவில் வங்கிகளின் நிலை படிப்படியாக மேம்பட்டு வருகிறது.


ஒட்டுமொத்தமாக கடன் வழங்குதலில் முன்னுரிமை அளிக்கப்பட்ட துறைகளில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை எட்டியுள்ள நிலையில், அதன் உட்பிரிவுகளான சிறு மற்றும் குறு விவசாயிகள் மற்றும் சிறு, குறு நிறுவனங்கள் போன்றவற்றிலும் இலக்குகளை அடைய வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் குறிப்பிட்டார்.

Input & Image courtesy: News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News