Kathir News
Begin typing your search above and press return to search.

கோழி கழிவுகளில் இருந்து டீசல் தயாரிப்பு : Patent வழங்கிய இந்திய அரசு!

கோழி கழிவுகளில் இருந்து டீசல் தயாரிப்பு : Patent வழங்கிய இந்திய அரசு!

ParthasarathyBy : Parthasarathy

  |  26 July 2021 10:53 AM GMT

கேரளாவின் வயநாடு மாவட்டம் கல்பெட்டாவுக்கு அருகே உள்ள அரசு கால்நடை மருத்துவக்கல்லூரியில் இணை பேராசிரியராக ஜான் ஆபிரகாம் பணியாற்றி வருகிறார். இவர் நாமக்கல்லில் உள்ள தமிழக அரசின் கால்நடை மருத்துவ பல்கலைக்கழகத்தில் 2009-2012 ஆம் ஆண்டு வரை ஆய்வு படிப்பு பயின்று வந்தார். அந்த சமயத்தில் இவர் கோழி கழிவுகள் மற்றும் இறந்த பறவைகளில் இருந்து பயோ டீசல் உருவாக்கும் ஆராய்ச்சியை மேற்கொண்டார். இதனை அடுத்து கடந்த 2014 ஆம் ஆண்டு இந்த ஆராய்ச்சியை வெற்றிகரமாக முடித்து, இதற்கான காப்புரிமைக்காக விண்ணப்பித்து இருந்தார்.


மேலும் ஜான் ஆபிரகாமின் ஆராய்ச்சியை ஆய்வு செய்த இந்திய காப்புரிமை அலுவலகம் தற்போது அவரது கண்டுபிடிப்பை அங்கீகரித்து காப்புரிமை வழங்கி இருக்கிறது. சுமார் 7½ ஆண்டுகால நீண்ட போராட்டத்துக்கு பின்னர் அவரது கண்டுபிடிப்பிற்கு இந்த அங்கீகாரத்தை இந்திய அரசு வழங்கி இருக்கிறது. இவர் கண்டுபிடித்த பயோ டீசல் குறித்து ஜான் ஆபிரகாம் கூறுகையில், கோழி கழிவுகளில் இருந்து தாயாராதிக்கப்பட்ட இந்த டீசலில் இயங்கும் வாகனங்களால் காற்று மாசுபாடு மிகவும் குறையும். மேலும் இந்த டீசல் ஒரு லிட்டருக்கு 38 கி.மீ. வரை மைலேஜ் அளிக்கும். அது மட்டுமின்றி தற்போதைய டீசல் விலையில் 40 சதவீத செலவிலேயே இந்த டீசலை வழங்கலாம் என்று அவர் கூறியுள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News