Kathir News
Begin typing your search above and press return to search.

நடைப்பாதை வியாபாரிகள் வரை உன்னிப்பாக உற்றுநோக்கும் மத்திய அரசு - அடித்தட்டு மக்களின் வாழ்வை உயர்த்தும் அரசின் திட்டம்..!

Over 84,67,000 projects grounded for construction and 50,16,642 houses delivered to the beneficiaries under Housing For All programme

நடைப்பாதை வியாபாரிகள் வரை உன்னிப்பாக உற்றுநோக்கும் மத்திய அரசு - அடித்தட்டு மக்களின் வாழ்வை உயர்த்தும் அரசின் திட்டம்..!

www.ourindia.com

MuruganandhamBy : Muruganandham

  |  6 Aug 2021 3:10 AM GMT

நகர்ப்புறத்தில் உள்ள நடைப்பாதை வியாபாரிகளுக்கு உதவ, தீன்தயாள் அந்தியோதையா திட்டம் - தேசிய நகர்ப்புற வாழ்வாதார திட்டத்தை (DAY-NULM), வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை அமைச்சகம் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் மூலமாக அமல்படுத்தி வருகிறது.

நடைப்பாதை வியாபாரிகளின் வாழ்வாதார விஷயங்களான தகுந்த இடம் கிடைக்கச் செய்வது, கடன் வசதி, சமூக பாதுகாப்பு வசதி போன்றவற்றை செய்து கொடுப்பதை இது நோக்கமாக கொண்டுள்ளது. மாநில பங்கு உட்பட, மொத்த ஒதுக்கீட்டில் 5 சதவீத தொகையை நடைபாதை வியாபார கட்டமைப்பை மேம்படுத்தும் பணிகளுக்கு மாநிலங்கள் செலவிட முடியும்.

மேலும், நடைபாதை வியாபாரிகளுக்கு மூலதன கடன் வழங்க பிரதமரின் ஸ்வாநிதி திட்டம் கடந்தாண்டு ஜூன் 1ம் தேதி தொடங்கப்பட்டது. இத்திட்டத்தி்ன கீழ் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நடைப்பாதை வியாபாரிகள் ரூ.10,000 கடன் பெற்று தங்கள் தொழிலை மீண்டும் தொடர முடியும்.

நடைபாதை வியாபாரிகளின் சமூக-பொருளாதார மேம்பாட்டுக்கு, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை அமைச்சகம் 'ஸ்வாநிதி சே சம்ரிதி' என்ற திட்டத்தை 125 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் கடந்த ஜனவரி 4ம் தேதி தொடங்கியது.

இத்திட்டம் பிரதமரின் ஸ்வாநிதி திட்ட பயனாளிகளையும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களையும், மத்திய அரசின் நலத்திட்டங்களான பிரதமரின் ஜீவன் ஜோதி பீமா யோஜனா, பிரதமரின் சுரக்‌ஷா பீமா யோஜனா, பிரதமரின் ஜன் தன் யோஜனா போன்றவற்றுடன் இணைப்பதை நோக்கமாக கொண்டுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News