Kathir News
Begin typing your search above and press return to search.

நெருக்கடியான சூழலில் மக்கள் மத்தியில் நேர்மறையான எண்ணங்களை உருவாக்கும் RSS..! முக்கிய தலைவர்களுக்கு அழைப்பு!

நெருக்கடியான சூழலில் மக்கள் மத்தியில் நேர்மறையான எண்ணங்களை உருவாக்கும் RSS..! முக்கிய தலைவர்களுக்கு அழைப்பு!
X

MuruganandhamBy : Muruganandham

  |  11 May 2021 6:15 AM IST

கொரோனா நெருக்கடியான சூழலில், மக்கள் மத்தியில் நேர்மறையான எண்ணங்களை உருவாக்கும் நோக்கில், "Positivity Unlimited" என்ற பெயரில், சமயம், ஆன்மீகம், தொழில் ஆகிய துறைகளை சேர்ந்த தலைவர்களின் மெய்நிகர் சொற்பொழிவிற்கு ஏற்பாடு செய்துள்ளது ஆர்.எஸ்.எஸ்.

இந்த சொற்பொழிவுகளை மே 11 முதல் மே 15 வரை தினமும் மாலை 4.30 மணி முதல் 5 மணி வரை (facebook.com/VishwaSamvadKendraBharat) மற்றும் (youtube.com/VishwaSamvadKendraBharat)ஆகிய டிஜிட்டல் பிளாட்ஃபார்ம்களில் பார்க்கலாம்.

மே 11 முதல் மே 15 வரை தினமும் மாலை 4.30 - 5 மணிக்கு ஒவ்வொரு நாளும் ஒருவர் உரையாற்றுகிறார். அந்தவகையில், சத்குரு, ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், பூஜானியா ஷங்கராச்சார்யா விஜயேந்திர சரஸ்வதி, சோனல் மன்சிங், மோகன் பகவத் உள்ளிட்டோர் உரையாற்றுகின்றனர்.

நிகழ்ச்சியில் உரையாற்றும் பிரபலங்களின் விவரம்:

மே 11 - சத்குரு, புஜ்யா ஜெயின் முனிஸ்ரீ ப்ரமன்சாகர்

மே 12 - ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், ஸ்ரீ ஆஸிம் பிரேம்(தொழில் முனைவோர்)

மே 13 - புஜானியா ஷங்கராச்சார்யா விஜயேந்திர சரஸ்வதி, ஜகத்குரு, காஞ்சி காமகோடி பீடம். சோனல் மன்சிங்.

மே 14 - ஆச்சார்யா வித்யாசாகர் ஜி மஹராஜ், புஜ்யா ஸ்ரீ மஹந்த் சாண்ட் ஜியான் தேவ் சிங்.

மே 15 - மோகன் பகவத்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News