Kathir News
Begin typing your search above and press return to search.

"காங்கிரஸ் கட்சியால், SC,ST,OBC அமைச்சர்களுக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை" - எல். முருகன் வேதனை!

காங்கிரஸ் கட்சியால், SC,ST,OBC அமைச்சர்களுக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை - எல். முருகன் வேதனை!

ParthasarathyBy : Parthasarathy

  |  22 July 2021 2:38 AM GMT

இரண்டு நாட்களுக்கு முன்பு பாராளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் துவங்கியது. இந்த கூட்டத்தில் அனைத்து கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்துக் கொண்டனர். அப்போது பாராளுமன்றத்தின் மரபாக பாரத பிரதமர் மோடி புதிதாக பொறுப்பேற்று கொண்ட அமைச்சர்களை அறிமுகப்படுத்த ஆரம்பித்தார். அந்த சமயத்தில் பிரதமர் பேசத்தொடங்கிய போது அங்குள்ள எதிர்க்கட்சிகள் பிரதமரை பேசவிடாமல் கூச்சல் போட்டு பெரும் அமளியில் ஈடுபட்டனர். எதிர்க்கட்சியின் இந்த செயலை கண்டு பிரதமர் மோடி ஏழை எளியவர்கள், பெண்கள், பின்தங்கியவர்கள், பழங்குடியினர் உள்ளிட்ட பலர் மந்திரிகள் ஆகியுள்ளது இங்கு இருக்கும் எதிர்கட்சியினருக்கு பிடிக்கவில்லை என்று கூறினார். இதனை அடுத்து இந்த கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்பட்டது.


எதிர்க்கட்சியின் இந்த கீழ்த்தரமான செயல் பல மக்களை முகம் சுழிக்க வைத்துள்ளது. மேலும் தமிழகத்தில் இருந்து மத்திய இணைய அமைச்சாராகி இருக்கும் Dr.L முருகன் பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சியின் செயலை கண்டு மிகவும் வேதனை அடைந்தார். அதுமட்டுமின்றி வரலாற்றில் அருந்ததியர் சமூகத்தின் முதல் இணைய அமைச்சராக பொறுப்பேற்று கொண்ட எல்.முருகன் அவர்களை பாராளுமன்றத்தின் முன்னிலையில் பிரதமர் மோடியால் அறிமுகம் செய்ய முடியாததை தொடர்ந்து மிகவும் மனவேதனை அடைந்தார்.


இதுகுறித்து, இணைய அமைச்சர் எல். முருகன் தனது ட்விட்டர் பக்கத்துல " வரலாற்றில் முதல் முறையாக அருந்ததியர் (SC) சமூகத்தில் இருந்து நான் மத்திய இணைய அமைச்சராக பொறுப்பேற்று இருக்கிறேன். ஆனால் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால், பாரத பிரதமர் மோடி அவர்கள் என்னை அனைவருக்கும் அறிமுகப்படுத்தும் வாய்ப்பை இழந்ததை கண்டு உணர்ச்சிரீதியாக வருத்தப்படுகிறேன். நான் மட்டுமின்றி என்னை போன்ற பழங்குடியினர், பின்தங்கியவர்கள், எளியவர்கள், பெண்கள் உள்ளிட்ட அனைவருக்கும் ஒரு அங்கீகாரம் கிடைக்காமல் போனதற்கு காரணம், காங்கிரஸ் மற்றும் பிற எதிர்க்கட்சிகள் செய்த கூச்சல் தான். இவர்களின் இந்த செயல் என்னக்கு மிகவும் மன வேதனையாக இருக்கிறது" என்று அவர் பதிவிட்டார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News