மக்களைக் கொல்ல பயிற்சி அளிக்கும் SDPI - கேரள முதல்வர் பினராயே உடைத்த இரகசியம்!

By : Muruganandham
இந்திய மக்கள் முன்னணியின் அரசியல் பிரிவான SDPI மீது கேரள முதல்வர் பினராயி விஜயன் பல குற்றசாட்டுகளை முன் வைத்தார். SDPI போன்ற அமைப்புகள் மக்களை "கொலை செய்ய" பயிற்றுவிப்பதாகக் பகிரங்கமாக கூறியுள்ளார்.
"எஸ்.டி.பி.ஐ போன்ற சில அமைப்புகள் நம் மாநிலத்தில் கொலை செய்ய பயிற்சி அளிக்கின்றன. அவர்களின் நோக்கம் எந்தவொரு அரசியல் நடவடிக்கையிலும் ஈடுபடுவதல்ல, மாறாக மக்களை எவ்வாறு கொலை செய்வது என்பதைக் கற்பிப்பதே" என்று அவர் கூறினார்.
இது ஒருபுறம் இருக்க கேரளாவில் 6 வயது சிறுமி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்ட விவகாரத்தில், திடீர் திருப்பமாக அச்சிறுமியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இளம் தலைவர் ஒருவர் பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்து அதை தற்கொலை போன்று சித்தரித்ததும், கடந்த 3 ஆண்டுகளாக அவர் சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து வந்ததும் தெரிய வந்துள்ளது.
ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இளைஞர் அமைப்பான DYFI-ன் உள்ளூர் பிரமுகரான 22 வயதாகும் அர்ஜூன் என்பவர் மீது காவல்துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டு அவரிடம் விசாரித்த போது சிறுமியை கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டுள்ளார். மேலும் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்களையும் அவர் தெரிவித்திருக்கிறார்.
கடந்த 3 ஆண்டுகளாக அவர் ஈடுபட்டு வந்த நிலையில் கடந்த ஜூன் 30-ஆம் தேதி பாலியல் வன்புணர்வு செய்த போது சிறுமி மயக்கமடைந்திருக்கிறார். இதனால் எங்கே தான் மாட்டிக்கொள்வோம் என நினைத்து சிறுமியை ஷாலை பயன்படுத்தி அவரின் வீட்டிலேயே தூக்கில் தொங்க விட்டிருக்கிறார்.
