சொன்னதை விட அதிகமாக கோவிஷீல்ட் தடுப்பூசிகளை உற்பத்தி செய்து காட்டியது SII நிறுவனம்!

By : Bharathi Latha
இந்தியாவில் அதிகமான மக்கள் தற்பொழுது நீண்ட வரிசையில் நின்றும் தங்களுடைய நேரத்தை ஒதுக்கி தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டு வருகிறார்கள். இதனால் தடுப்பூசிகளின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வண்ணம்தான் உள்ளது. எனவே உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசின் சார்பாக தடுப்பூசி உற்பத்தி நிறுவனங்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து நடப்பு ஜூன் மாதத்தில் மட்டும் 10 கோடிக்கும் அதிகமான கோவிஷீல்ட் தடுப்பூசிகளை உற்பத்தி செய்துள்ளதாக சீரம் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதாவது கொரோனா தொற்று பரவலைத் தடுக்க அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துவது மட்டுமே தீர்வாக இருக்கும் என்று உலக சுகாதார அமைப்பு(WHO) தெரிவித்துள்ளது. இதனால், பல்வேறு வளர்ந்த நாடுகளும் தடுப்பூசி உற்பத்தியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இந்நிலையில், இந்தியாவில் கோவிஷீல்ட் தடுப்பூசி உற்பத்தியில் ஈடுபட்டுள்ள சீரம் இந்தியா நிறுவன இயக்குநர் பிரகாஷ்குமார் சிங் இதுபற்றி கடந்த மாதம் கூறுகையில், "கடந்த மே மாதம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்களுக்கு எழுதிய கடிதத்தில், 6.5 கோடியாக உள்ள கோவிஷீல்ட் தடுப்பூசிகளின் உற்பத்தி, ஜூன் மாதத்தில் 9 கோடி முதல் 10 கோடியாக அதிகரிக்கப்படும்" எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்புக்கு(DCGI) சீரம் நிறுவனம் இன்று அளித்துள்ள தகவலின் படி, நடப்பு ஜூன் மாதத்தில் இதுவரை 45 தொகுதிகளாக 10.80 கோடி கோவிஷீல்ட் தடுப்பூசிகளை உற்பத்தி செய்யப்பட்டு, மத்திய மருந்துகள் ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் ஏற்கனவே சொன்ன மாதிரி தற்பொழுது சொன்ன மாதிரி தற்போது சீரம் நிறுவனம் 10 கோடி தடுப்பூசிகளை உற்பத்தி செய்து அனுப்பி வைத்துள்ளது. எனவே நிறுவனத்தின் இந்த முயற்சியை பல்வேறு தரப்பினரும் பாராட்டியுள்ளனர்.
