கோவாக்சின் தடுப்பூசிக்கு அனுமதி கிடைக்குமா? அடுத்த மாதத்தில் முடிவைச் சொல்லும் WHO!

By : Bharathi Latha
கொரோனாவிற்கு எதிராக இந்தியாவில் மூன்று வகையான தடுப்பூசிகள் தற்போது பயன்பாட்டில் உள்ளன. அந்த வகையில் இந்தியாவின் உள்நாட்டு தயாரிப்பான பாரத் பயோடெக்கின் கோவாக்சின், சீரம் நிறுவனத்தில் கோவிஷீல்டு தடுப்பூசிகளும், ரஷ்யாவின் ஸ்புட்னிக் V தடுப்பூசியும் மக்களுக்கு தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருகிறது.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால், வெளிநாடு செல்வோர் தடுப்பூசி போட்டுக்கொண்ட சான்றை வைத்துக் கொள்வது மிகவும் அவசியமாகியிருக்கிறது. ஏனென்றால் ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு பயணமாகும் போது அவர்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டார்கள் என்பதை உறுதி செய்வதற்காக இந்த சான்றிதழ் பயனளிக்கிறது.
ஆனால் வெளிநாடுகளுக்கு பயணம் செய்யும்பொழுது உலக சுகாதார நிறுவனம் அங்கீகரித்த தடுப்பூசிகள் மட்டும்தான் மற்ற நாடுகளில் ஏற்றுக் கொள்ளப்படுகின்றது. எனவே ஏற்றுக்கொள்ளாத தடுப்பூசிகளை போட்டுக் கொண்டு வருகிறார்களோ? அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வருகின்றது. கோவாக்சின், கோவிஷீல்டு மட்டுமே பயன்பாட்டில் உள்ள இந்தியா உட்பட பல நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள், தொழில் வர்த்தகர்கள் எனப் பலதரப்பினரையும் இந்த முடிவு அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
எனவே, கோவிஷீல்டு தடுப்பூசிக்கு உலக சுகாதார நிறுவனத்தின் அவசரகால அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கோவாக்சினுக்கு அந்த அனுமதி வழங்கப்படவில்லை. கோவாக்சின் தடுப்பூசியை அவசர கால பயன்பாட்டுக்கு அனுமதி வழங்குவது குறித்த ஆகஸ்ட் முதல் வாரத்தில் உலக சுகாதார நிறுவனம்(WHO) முடிவெடுக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கு அங்கீகாரம் கிடைத்தால், கோவாக்சின் தடுப்பூசி செலுத்தியவர்கள் பிற நாடுகளுக்கு செல்ல முடியும், மீண்டும் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டிய தேவையில்லாமல் போகக்கூடும் எனக் கூறப்படுகிறது.
