Kathir News
Begin typing your search above and press return to search.

விவசாயிகள் போராட்டத்தில் புனிதமான தேசிய கொடியை அவமதித்த "தீப் சித்து" பற்றி துப்பு கொடுத்தால் 1 இலட்சம் சன்மானம்!

விவசாயிகள் போராட்டத்தில் புனிதமான தேசிய கொடியை அவமதித்த "தீப் சித்து" பற்றி துப்பு கொடுத்தால் 1 இலட்சம் சன்மானம்!

விவசாயிகள் போராட்டத்தில் புனிதமான தேசிய கொடியை அவமதித்த தீப் சித்து பற்றி துப்பு கொடுத்தால் 1 இலட்சம் சன்மானம்!

Muruganandham MBy : Muruganandham M

  |  4 Feb 2021 8:12 AM GMT

ஜனவரி 26 விவசாயிகள் வன்முறை வழக்கில் பஞ்சாபி நடிகர் மற்றும் செயற்பாட்டாளர் தீப் சித்து உட்பட பல சந்தேக நபர்கள் குறித்த தகவலை வழங்கும் மக்களுக்கு 1 இலட்சம் ரூபாய் சன்மானம் வழங்குவதாக அறிவித்துள்ளது. குடியரசு தினத்தை கொண்டாடும் நாளில் ஒரு மதக் கொடி கட்டப்பட்ட டிராக்டரில் செங்கோட்டைக்கு வந்து, விவசாயிகளை வன்முறைக்கு தூண்டியது மற்றும் வழிநடத்தியது போன்ற குற்றத்திற்காக சித்து மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ஜனவரி 26 முதல் காணாமல் போன தீப் சித்துவை கைது செய்ய அவர் குறித்த தகவல் வழங்கும் மக்களுக்கு தில்லி காவல்துறை தலா ரூ .1 லட்சம் ரொக்க வெகுமதியை அறிவித்துள்ளது.

மேலும், செங்கோட்டையில் கொடிக் கம்பத்தில் ஏறி மதக் கொடியை ஏற்றிய ஜுக்ராஜ் சிங் குறித்த தகவல்களை வழங்குவோருக்கும் காவல்துறை தலா ரூ .1 லட்சம் ரொக்கப் பரிசை அறிவித்துள்ளது. குர்ஜோத் சிங், ஜஜ்பீர் சிங், பூட்டா சிங், சுக்தேவ் சிங் மற்றும் இக்பால் சிங் ஆகியோரை கைது செய்ய வழிவகுத்த தகவல்களுக்கு தலா ரூ .50 ஆயிரம் பரிசு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஜனவரி 26 ம் தேதி தேசிய தலைநகரில் டிராக்டர் பேரணியை நடத்திய விவசாயிகள் கலவரம், சொத்துக்களை அழித்தல் மற்றும் அரசு ஊழியர்களுக்கு எதிராக "குற்றவியல் சக்தியை" மேற்கொள்வது ஆகியவற்றில் "ஆக்ரோஷமாக" ஈடுபட்டதாக குற்றம் சட்டப்பட்டது. கலவரக் கூட்டத்தைக் கட்டுப்படுத்த கண்ணீர்ப்புகை, நீர் பீரங்கிகள் மற்றும் லேசான மனித சக்தியைப் பயன்படுத்தியது.

ஒரு எழுத்துப்பூர்வ பதிலில், மத்திய உள்துறை இராஜாங்க அமைச்சர் ஜி. கிஷன் ரெட்டி, டெல்லி எல்லைகளில் அந்த நாளில், டிராக்டர் வண்டிகளில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள், பெரும் எண்ணிக்கையில் தேசிய தலைநகருக்குள் ஆவேசமாக நுழைந்து போலீஸ் தடுப்புகளை தாண்டி செல்ல முயன்றனர்.

"அவர்கள் கலவரம், அரசாங்க சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல் மற்றும் பொது ஊழியர்களை தங்கள் கடமையை நிறைவேற்றுவதைத் தடுக்க குற்றவியல் சக்தியைப் பயன்படுத்தினர், இதனால் கடமையில் இருந்த காவல்துறையினருக்கு காயங்கள் ஏற்பட்டன.

"மேலும், சமூக விலகளை விவசாயிகள் மற்றும் எதிர்ப்பாளர்கள் பின்பற்றவில்லை, அவர்கள் COVID-19 தொற்றுநோய்களுக்கு மத்தியில் முககவசம் இல்லாமல் பெருமளவில் கூடியிருந்தனர். விவசாயிகளின் கூட்டத்தை கட்டுப்படுத்த தில்லி காவல்துறையினருக்கு கண்ணீர் புகை, நீர் பீரங்கிகள் மற்றும் லேசான சக்தியைப் பயன்படுத்துவதைத் தவிர வேறு வழியில்லை" என ரெட்டி கூறினார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News