இந்து பெண்களை காதல் வலையில் வீழ்த்த 1 லட்சம்! ஆந்திராவில் அதிர்ச்சி!
இந்து பெண்களை காதல் வலையில் வீழ்த்த 1 லட்சம்! ஆந்திராவில் அதிர்ச்சி!
By : Shiva V
தெலுங்கு பேசும் மாநிலங்களில் அதிகரித்து வரும் கிறிஸ்தவ மிஷனரி ஆதிக்கத்தை வெளிப்படுத்தும் விதமாக 'கிறிஸ்தவ லவ் ஜிகாத்' பற்றிய வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. கிறிஸ்தவ மகாசேனா என்ற அமைப்பின் தலைவர் சரிபேலா ராஜேஷ் என்பவர், உயர் சாதியைச் சேர்ந்த பெண் ஒருவரை மணம் முடித்து கிறிஸ்தவ மதத்துக்கு மாற்றிய ஒருவருக்கு ஒரு லட்சம் பணம் கொடுப்பதாகக் கூறும் காட்சிகள் அந்த வீடியோவில் அமைந்துள்ளன.
இந்து பெண்களை காதல் வலையில் வீழ்த்துமாறு கிறிஸ்தவ இளைஞர்களை ஊக்குவிக்கும் சிரிபேலா ராஜேஷ், அவர்களது வழியில் யாராவது குறுக்கிட்டால் அவர்களை அடித்து உதைக்கவும் தான் உதவத் தயாராக உள்ளதாக உறுதி அளிக்கிறார். உயர் சாதியினரை அதிக அளவில் மதம் மாற்றுவது கடினமாக இருப்பதால் இத்தகைய குறுக்கு வழியில் மிஷனரிகள் இறங்கி உள்ளதாகக் கூறப்படுகின்றது.Christian organisation in Andhra Pradesh offering lakhs of rupees to convert and trap Hindu girls.
— Rameshnaidu Nagothu (@RNagothu) December 20, 2020
This must be stopped asap but we don’t have any hope left from @ysjagan govt.
https://t.co/hEpONqPwYi pic.twitter.com/VIoYBoQMju
முன்னாள் காங்கிரஸ் முதல்வர் YS.ராஜசேகர ரெட்டி ஒரு கிறிஸ்தவர் என்பதால், அவரது ஆட்சிக் காலத்தில் மிஷனரிகளின் செயல்பாடுகள் எல்லையின்றி ஊக்குவிக்கப்பட்டன. ரெட்டியின் மருமகன் அனில் குமார் பிராமண சமூகத்தைச் சேர்ந்தவர். இவர் 1995ஆம் ஆண்டு ரெட்டியின் மகள் ஷர்மிளாவை மணந்த பின்னர் கிறிஸ்தவ மதத்தைத் தழுவியது குறிப்பிடத்தக்கது.
அப்போதிருந்து மிஷனரி செயல்பாடுகளில் ஈடுபட்டு வரும் இவர், 1998லிருந்து Anil World Evangelism என்ற மிஷனரி அமைப்பையும் நடத்தி வருகிறார். 2004ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று YSR ஆட்சி அமைத்ததை அடுத்து மிஷனரி நடவடிக்கைகள் கட்டுக்கடங்காமல் சென்றன. திருப்பதி உட்பட இந்துக்களின் புனிதத் தலங்கள் குறிவைத்து தாக்கப்பட்டன.கடலோர மாவட்டங்கள், குறிப்பாக கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் கிட்டத்தட்ட முழு கிரமங்களுமே மதம் மாற்றப்பட்ட சம்பவங்களும் நடந்தன. House church என்ற பெயரில் கிறிஸ்தவர்களே இல்லாத இடங்களில் கூட வீடுகளில் சர்ச் ஆரம்பிக்கப்பட்டு பின்னர் வெளிநாட்டு மற்றும் அரசு நிதி உதவியுடன் பெரிய தேவாலயங்களாக மாற்றப்பட்டன.
YSR ரெட்டியின் மகன் ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியிலும் இது தான் நடக்கிறது. கோவில் நிலங்களையும், பழங்குடியினர் சொத்துக்களையும் பாஸ்டர்கள் அடித்துப் பிடுங்குவது, கடவுள் சிலைகளை உடைப்பது, கோவில் தேர்களை எரிப்பது என மிஷனரிகளின் ஆட்டம் கட்டுக்கடங்காமல் சென்று கொண்டிருக்கிறது. இந்த வீடியோ இத்தகைய மறுக்க முடியாத உண்மைகளை ஆதாரத்துடன் நிரூபித்துள்ளது.