Kathir News
Begin typing your search above and press return to search.

10 கோடி மக்களுக்கு சென்றடையப்போகும் மானியம் - நேரடியா பேங்க் அக்கவுண்டுக்கே வரும்: பிரதமரின் அறிவிப்பு!

10 கோடி மக்களுக்கு சென்றடையப்போகும் மானியம் - நேரடியா பேங்க் அக்கவுண்டுக்கே வரும்: பிரதமரின் அறிவிப்பு!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  26 March 2023 6:30 AM IST

பிரதமர் மோடி தலைமையிலான பொருளாதார நடவடிக்கைகளுக்கான மத்திய அமைச்சரவை குழு பிரதமரின் உஜ்வாலா பயனாளிகளுக்கு 14.2 கிலோ எரிவாயு உருளைக்கு ரூ. 200 என்று அதிகபட்சம் ஆண்டுக்கு 12 முறை எரிவாயு நிரப்புவதற்கு மானியம் வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.

2021 மார்ச் 1 ஆம் தேதி படி 9.59 கோடி பிரதமரின் உஜ்வாலா பயனாளிகள் நாட்டில் உள்ளனர். இந்த மானியத்திற்காக 2022-2023 நிதியாண்டில் 6100 கோடி ரூபாயும், 2023 - 2024 நிதியாண்டில் 7680 கோடி ரூபாயும் செலவாகும் என கணக்கிடப்பட்டுள்ளது.

இந்த மானியம் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட உள்ளது. இந்த மானியம் கடந்த 2022 ஆம் ஆண்டு மே 22ஆம் தேதி முதல் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனங்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டு விட்டது.

பல்வேறு புவிசார் அரசியல் காரணமாக சமையல் எரிவாயுவின் சர்வதேச விலை உயர்ந்து வரும் நிலையில், இந்த மானிய அறிவிப்பு உஜ்வாலா பயனாளிகளுக்கு சமையல் எரிவாயு விலை உயர்வில் இருந்து நிவாரணம் அளிக்கும்.

இது உஜ்வாலா பயனாளிகள் சமையல் எரிவாயு உருளைகளை தொடர்ந்து பயன்படுத்துவதற்கான முக்கிய நடவடிக்கை ஆகும். மேலும், உஜ்வாலா பயனாளிகள் நீடித்த சமையல் எரிவாயுவை ஏற்றுக் கொள்ளும் பாங்கு மற்றும் அவற்றின் தொடர் பயன்பாட்டை உறுதி செய்வதே முக்கியம் இதன்மூலம் அவர்கள் தூய்மையான சமையல் எரிபொருளுக்கு மாற முடியும்.

2019- 20 இல் 3.01 ஆக இருந்த சமையல் எரிவாயு உருளைப் பயன்பாடு 2021-22ல் 3.68 ஆக உள்ளது. பிரதமரின் உஜ்வாலா திட்ட பயனாளிகள் அனைவரும் இந்த மானியத்தை பெற தகுதியுடையவர்கள் ஆவர்.

கிராமப்புற, ஒடுக்கப்பட்ட ஏழை குடும்பங்களுக்கு சுத்தமான சமையல் எரிபொருளை வழங்கும் முயற்சியாக, இலவச சமையல் எரிவாயு உருளைகளை ஏழைப் பெண்களுக்கு வழங்கும் நோக்கில், கடந்த 2016 மே மாதத்தில் உஜ்வாலா திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

Input From: India Times

Next Story
கதிர் தொகுப்பு
Trending News