Kathir News
Begin typing your search above and press return to search.

பிரதமர் மோடியின் நட்பு காரணமாக வெளிநாடுகளில் இருந்து மீட்கப்பட்ட 10 சிலைகள் - தமிழக அரசிடம் ஒப்படைத்தார் எல்.முருகன்

பிரதமர் மோடியின் நட்பு காரணமாக வெளிநாடுகளில் இருந்து மீட்கப்பட்ட 10 சிலைகள் - தமிழக அரசிடம் ஒப்படைத்தார் எல்.முருகன்

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  2 Jun 2022 10:41 AM GMT

தமிழக கோவில்களில் இருந்து திருடப்பட்ட சாமி சிலைகள் ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்காவிற்கு கடத்தப்பட்டன. அதில் 10 பபழமையான கோயில் சிலைகளை மத்திய அரசு மீட்டுள்ளது.

துவாரபாலகர், நடராஜர், விஷ்ணு, ஸ்ரீதேவி, சிவன் பார்வதி சிலைகள், குழந்தைப் பருவ சம்பந்தர், உள்பட 10 சிலைகளை மத்திய கலாச்சாரத்துறை மந்திரி கிஷண் ரெட்டி, தமிழக அரசிடம் ஒப்படைத்தார்.

சிலையை தமிழக அரசிடம் ஒப்படைக்கும் விழா டெல்லியில் நடைபெற்றது. அதில் மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சர் எல் முருகன், கலாச்சாரத் துறை இணை அமைச்சர் மீனாட்சி லேகி, அர்ஜூன் ராம் மேஹ்வால் ஆகியோர் முன்னிலையில், தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திர பாபு இந்தச் சிலைகளைப் பெற்றுக்கொண்டார்.

உலக நாடுகளின் தலைவர்களுடன் பிரதமரின் தனிப்பட்ட நட்புறவு காரணமாக, நம்நாட்டிலிருந்து கடத்தப்பட்ட சிலைகளை அடையாளம் காணும் பணியை ஆஸ்திரேலியா, அமெரிக்கா போன்ற நாடுகள் விரைவாக மேற்கொண்டு, அவற்றை திருப்பி ஒப்படைக்கும் வரை, ஒத்துழைப்பு அளித்து வருகின்றன.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News