Kathir News
Begin typing your search above and press return to search.

கட்டாயமாக மதம் மாற்றத்திற்கு 10 ஆண்டு சிறை.. ம.பி., அமைச்சரவை ஒப்புதல்.!

கட்டாயமாக மதம் மாற்றத்திற்கு 10 ஆண்டு சிறை.. ம.பி., அமைச்சரவை ஒப்புதல்.!

கட்டாயமாக மதம் மாற்றத்திற்கு 10 ஆண்டு சிறை.. ம.பி., அமைச்சரவை ஒப்புதல்.!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  26 Dec 2020 10:39 PM IST

நாடு முழுவதும் கட்டாயமாக மதமாற்றம் செய்யும் வேலையில் மிஷனரிகள் ஈடுபட்டு வருகின்றது. இதற்காக பல்வேறு மாநிலங்கள் மதமாற்றம் செய்வதற்கு தண்டனையை கடுமையாக்கியுள்ளது.

இந்நிலையில், திருமணம் அல்லது ஏமாற்றி, கட்டாயமாக மதம் மாற்றுவோரை தண்டிக்க மத சுதந்திர சட்டம் 2020க்கு மத்திய பிரதேச அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த சட்டம் தொடர்பாக, மாநில உள்துறை அமைச்சர் நீரோட்டம் மிஸ்ரா கூறியதாவது: குற்றவாளிகளுக்கு ரூ.1 லட்சம் அபராதமும், 10 ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்க முடியும்.

நாட்டிலேயே, இந்த சட்டம் அமலுக்கு வந்த பின்னர், திருமணம், மோசடி செய்து அல்லது ஏமாற்றுவோருக்கு கடும் தண்டனை வழங்குவதாக இருக்கும்.
1968 ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட மத சுதந்திர சட்டத்திற்கு மாற்றாக இருக்கும். புதிய சட்டத்தின்படி, மதம் மாற்றுவதற்காக மட்டும் செய்யப்பட்ட திருமணம் செல்லுபடியாகாது. மதம் மாற விரும்புவோர், முன்னதாகவே மாவட்ட நிர்வாகத்திற்கு அனுமதி கேட்டு விண்ணப்பம் செய்ய வேண்டும் என தெரிவித்தார்.

மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து, விரைவில் கூட உள்ள சட்டசபை தொடரில், தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படும். பின்னர் அமலுக்கு வரும். உத்தரப்பிரதேச அரசை தொடர்ந்து, லவ் ஜிகாத்திற்கு எதிராக மத்திய பிரதேச அரசும் தற்போது சட்டம் கொண்டு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News