Kathir News
Begin typing your search above and press return to search.

'100 கோடிக்கும் மேல் மக்கள் தொகை கொண்ட பாரதம், மத நல்லிணக்கத்திற்கு சரியான உதாரணம்' : தலாய் லாமா புகழாரம்!

100 கோடிக்கும் மேல் மக்கள் தொகை கொண்ட பாரதம், மத நல்லிணக்கத்திற்கு சரியான உதாரணம் : தலாய் லாமா புகழாரம்!

ParthasarathyBy : Parthasarathy

  |  9 July 2021 1:00 AM GMT

திபெத் புத்த மத தலைவர் தலாய் லாமா, இந்தியாவில் உள்ள தர்மசாலாவில் வசித்து வருகிறார். சமீபத்தில் அவர் தனது 86வது பிறந்த நாளை கொண்டாடினார். இதையொட்டி, பிரபல மருந்து நிறுவனமான டாக்டர்.ரெட்டிஸ் லேபரட்டரிஸ் தலைவர் ஜி.வி. பிரசாத் உள்ளிட்டோருடன் காணொலி காட்சி வாயிலாக கலந்துரையாடினார்.


அந்த காணொளி காட்சி மூலம் அவர் பேசுகையில் "இந்தியாதான் எனது வீடு என்று நான் எப்போதுமே கூறி வந்திருக்கிறேன். நான் திபெத்தில் பிறந்திருந்தாலும், எனது வாழ்வின் பெரும்பகுதியை இந்த இந்திய நாட்டில்தான் நான் வாழ்ந்திருக்கிறேன். நான் இந்திய அரசின் விருந்தினர் என்பதில் பெருமிதம் கொள்கிறேன். நான் தான் இந்திய அரசின் மிக நீண்ட கால விருந்தினர் என்று நினைக்கிறேன். ஆனால் இந்த விருந்தினரால் எந்தப் பிரச்சினையும் வராது.


இந்தியாவில் உள்ள மத நல்லிணக்கம் மற்றும் பத்திரிகை சுதந்திரம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு. இந்தியாவில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக கடைபிடித்து வந்த அகிம்சை மற்றும் கருணையை இன்று வரை ஊக்கவித்து வருகின்றனர்.100 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்டுள்ள இந்த நாடு மத நல்லிணக்கத்துக்கு சரியான உதாரணம் ஆகும். இதற்கான காரணம் இந்திய நாட்டில் உள்ள மக்கள் மட்டுமே.


மத நல்லிணக்கத்திற்கு இந்தியாவை பிற நாடுகள் பின்பற்றவேண்டும். இந்திய மருத்துவர்கள் தங்கள் கடமையை ஆற்றுகிறபோது, சகோதரத்துவத்துடன் நடந்து கொள்ள வேண்டும். என் பிறந்த நாளில் வாழ்த்து தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி உள்பட அனைவருக்கும் நன்றி. நான் குறைந்தது 110 ஆண்டுகள் வாழ வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளேன்" என்று அவர் கூறினார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News