கர்நாடகாவில் 100 சதவீத முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தி சாதனை!
கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் பரவலை தடுக்கும் விதமாக அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணியானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
By : Thangavelu

தற்போது மாநிலத்தில் முதல் டோஸ் தடுப்பூசி 100 சதவீதம் பேருக்கு செலுத்தி கர்நாடகா மாநிலம் சாதனை படைத்துள்ளது. அடுத்து 85 சதவீதம் பேர் 2வது டோஸ் தடுப்பூசியை போட்டுக் கொண்டுள்ளனர். பல மாநிலங்களை காட்டிலும் தடுப்பூசி போடுவதில் கர்நாடகம் முன்மாதிரியாக திகழ்ந்து வருகிறது. இவை ஒரு ஆண்டில் எடுத்துக்கொண்ட சாதனை ஆகும். இதற்காக சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு நன்றியை தெரிவிக்க கடமை பட்டுள்ளேன். அதே சமயம் பள்ளிக்குழந்தைகளுக்கு 29 சதவீத தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இவ்வாறு சுகாதாரத்துறை அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
Source: Daily Thanthi
Image Courtesy: The Times Of Truth