1000 ஆண்டுகளுக்கு முன்பே தமிழகம்-குஜராத் இடையே தொடர்பு? காசியை தொடர்ந்து குஜராத்திலும் தமிழ் சங்கமம்!
By : Kathir Webdesk
காசி தமிழ் சங்கமம் நிகழ்வை மத்திய அரசு, உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் கடந்தாண்டு நவம்பர் முதல் டிசம்பர் வரை ஒரு மாதமாக நடத்தியது. இதனை பிரதமர் மோடி துவக்கி வைத்தார். பெருமளவு வரவேற்பு கிடைத்தது.
தொடர்ந்து பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்திலும் தமிழ் சங்கமம் நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.
ஏப்ரல் மாதத்தில் 10 நாள் நிகழ்ச்சியாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் 3000 முதல் 5000 பேர் அழைக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது கலாச்சார நிகழ்ச்சிகளைப் பார்ப்பது மட்டுமல்லாமல், கலை, உணவு, கைவினைஞர்கள், கல்வி, இலக்கியம் மற்றும் விளையாட்டு நடவடிக்கைகள் மூலம் ஒரு தொடர்பை உருவாக்கும்.
1024ல் கஜினி முகமது படையெடுப்பின்போது, குஜராத் மக்கள் தென்னிந்தியா உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு இடம்பெயர்ந்தனர்.
திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், சேலம் போன்ற இடங்களில் குடிபெயர்ந்தனர். குஜராத் மற்றும் தமிழகம் ஆகிய இரு மாநிலங்களுக்கிடையேயான பெரிய தொடர்புகளில் இதுவும் ஒன்றாகும்.
12 லட்சம் சவுராஷ்டிர மக்கள் தமிழகத்தில் குடியேறி உள்ளனர். 50 சதவீதத்திற்கும் அதிகமானோர் மதுரையில் வசிக்கின்றனர். மீதமுள்ளவர்கள் சென்னை, சேலம், தஞ்சாவூர் மற்றும் திருநெல்வேலி போன்ற மாவட்டங்களிலும் உள்ளனர்.
Input From: Dinamalar