Kathir News
Begin typing your search above and press return to search.

அரசின் அசத்தல் திட்டம்.. 3 ஆண்டுகளில்.. ஒவ்வொரு 200-300 கி.மீ தொலைவிலும் 1,000 திரவ இயற்கை எரிவாயு நிலையங்கள்.!

அரசின் அசத்தல் திட்டம்.. 3 ஆண்டுகளில்.. ஒவ்வொரு 200-300 கி.மீ தொலைவிலும் 1,000 திரவ இயற்கை எரிவாயு நிலையங்கள்.!

அரசின் அசத்தல் திட்டம்.. 3 ஆண்டுகளில்.. ஒவ்வொரு 200-300 கி.மீ தொலைவிலும் 1,000 திரவ இயற்கை எரிவாயு நிலையங்கள்.!
X

Rama SubbaiahBy : Rama Subbaiah

  |  20 Nov 2020 12:00 AM IST

தங்க நாற்கர சாலையின் ஒவ்வொரு 200-300 கிலோமீட்டர் தொலைவிலும் 1,000 திரவ இயற்கை எரிவாயு நிலையங்கள் நிறுவப்படும் என்று மத்திய பெட்ரோலியம், இயற்கை எரிவாயு மற்றும் எஃகு அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் கூறினார்.

தங்க நாற்கர சாலை மற்றும் முக்கிய தேசிய நெடுஞ்சாலைகளில் அமையவுள்ள முதல் 50 திரவ இயற்கை எரிவாயு நிலையங்களுக்கான அடிக்கல்லை தர்மேந்திர பிரதான் இன்று நாட்டினார்.

இந்தியாவை எரிவாயு சார்ந்த பொருளாதாரமாக மாற்றும் பிரதமர் திரு நரேந்திர மோடியின் லட்சியத்தை அடைவதற்காக பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் எடுத்து வரும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்த திரவ இயற்கை எரிவாயு நிலையங்கள் அமையவுள்ளன என்றார்.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான், அடுத்த மூன்று ஆண்டுகளில் 1,000 திரவ இயற்கை எரிவாயு நிலையங்கள் நிறுவப்படும் என்றார். அனைத்து முக்கிய சாலைகள், தொழில் மையங்கள் மற்றும் சுரங்கப் பகுதிகளில் இவை அமையும் என்றும் அவர் கூறினார்.

தங்க நாற்கரண சாலையின் ஒவ்வொரு 200-300 கிலோமீட்டர் தொலைவிலும் திரவ இயற்கை எரிவாயு நிலையங்களை அரசு நிறுவும் என்று அவர் மேலும் கூறினார். எதிர்காலத்தின் எரிசக்தியாக திரவ இயற்கை எரிவாயு இருக்கப் போகிறது என்று அவர் தெரிவித்தார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News