காணொலி மூலம் தமிழகத்திற்கு புதிய மருத்துவக் கல்லூரிகளை, பொங்கல் பரிசாக பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்!
தமிழகத்தில் மட்டும் அரசு மருத்துவ கல்லூரிகள் 37 உள்ளது. இதன் மூலம் 5,125 மாணவர்கள் சேர்ந்த படிக்கலாம். மேலும் மருத்துவ கட்டமைப்புகளை விரிவுபடுத்தவும், கூடுதலான மருத்துவ மாணவர்களை சேர்க்கவும் கடந்த அதிமுக அரசு மத்திய அரசிடம் கோரிக்கை வைத்திருந்தது. இதனால் 11 புதிய மருத்துவ கல்லூரிகளின் கட்டுமானங்கள் மிக வேகமாக நடைபெற்று வந்தது. இதனிடையே தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.
By : Thangavelu

இந்நிலையில், கடந்த ஆண்டு மட்டும் நாடு முழுவதும் 75 புதிய மருத்துவ கல்லூரிகள் தொடங்குவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது. அதில் 11 மருத்துவ கல்லூரிகள் தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்டது. அதன்படி மருத்துவ கல்லூரி இல்லாத மாவட்டங்களான திருவள்ளூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, திருப்பூர், நீலகிரி, நாகப்பட்டினம், நாமக்கல், கிருஷ்ணகிரி, திண்டுக்கல், ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய 11 மாவட்டங்களில் தலா ஒரு மருத்துவ கல்லூரி வீதம் 11 மருத்துவ கல்லூரிகளை தொடங்குவதற்கான பணிகளை கடந்த அதிமுக அரசு செய்து வந்த நிலையில் தற்போது பணிகள் முழுவதும் நிறைவடைந்துள்ளது.
அதில் ஒவ்வொரு கல்லூரியிலும் தலா 150 மாணவர்கள் வீதம் 1,650 மாணவர்களை சேர்ப்பதற்காக அகில இந்திய மருத்துவ கவுன்சில் அனுமதி வழங்கியது. அனைத்தையும் மத்திய குழு நேரில் ஆய்வு செய்து கல்லூரிகளை திறக்கலாம் என அறிக்கையை சமர்ப்பித்தது.
இந்நிலையில், வருகின்ற ஜனவரி 12ம் தேதி பிரதமர் மோடி விருதுநகர் மாவட்டத்தில் இருந்து 11 மருத்துவ கல்லூரிகளையும் திறந்து வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டது. இதன் பின்னர் கொரோனா தொற்று காரணமாக நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டது. தற்போது காணொலி காட்சி வாயிலாக கல்லூரிகள் திறப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனை பிரதமர் மோடி டெல்லியில் இருந்தவாறு காணொலி வாயிலாக திறந்து வைப்பார் என கூறப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சி சென்னை தலைமை செயலகத்தில் நடைபெறுகிறது. இதில் சிறப்பு விருந்தினராக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சு க் மண்டாவியா, முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர்.
Source,Image Courtesy: Maalaimalar