120 வயதில் தடுப்பூசி செலுத்திக்கொண்ட மூதாட்டி.. நேரில் சென்று பாராட்டிய ராணுவ அதிகாரி.!
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகளவிலான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் தொற்று பரவலை தடுக்க ஒரே வழி தடுப்பூசி மட்டுமே என்பது விஞ்ஞானிகளின் ஒரே தீர்வாக உள்ளது. இதனால் தடுப்பூசியை பல்வேறு பிரபலங்கள் செலுத்திக் கொண்டு பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

By : Thangavelu

இந்நிலையில், ஜம்முகாஷ்மீரில் 120 வயதில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பாட்டி அனைவருக்கும் முன்மாதிரியாக திகழ்ந்து வருகிறார். நாட்டில் அரசியல் தலைவர்களே தடுப்பூசி குறித்து தவறான தகவலை பரப்பிய நிலையில், மிகவும் வயது முதிர்ந்த மூதாட்டி மற்ற அனைருக்கும் உத்வேகத்தை அளிக்கின்ற வகையில் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளார்.
ஜம்மு காஷ்மீர், உதம்பூர் மாவட்டம், கதியார் என்ற கிராமத்தை சேர்ந்தவர் தோலி தேவி இவருக்கு 120 வயதாகிறது. இவர் தள்ளாடும் வயதிலும் கொரோனா தொற்று குறித்து கிராம மக்களிடையே விழிப்புணர்வுகளை ஏற்படுத்தியுள்ளார்.
இதனால் கிராமத்தில் முதல் ஆளாக கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்டார். அது மட்டுமின்றி தடுப்பூசி செலுத்திக்கொண்டதால் எந்த பிரச்சனையும் இல்லை என்று கிராம மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார். தயக்கம் இன்றி அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
இந்நிலையில், இந்த தகவல் பற்றி அறிந்த வடக்கு ராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஒய்.கே. ஜோஷி மற்றும் ராணுவ அதிகாரிகள் தோலி தேவி பாட்டியின் வீட்டுக்கு சென்று கிராம மக்கள் முன்னிலையில் கவுரப்படுத்தினார்கள்.