Kathir News
Begin typing your search above and press return to search.

14 வயது வரை கவனிக்கணும்: கிராமங்களில் உள்ள அங்கன்வாடிகளுக்கு மத்திய அரசின் இலக்கு!

14 வயது வரை கவனிக்கணும்: கிராமங்களில் உள்ள அங்கன்வாடிகளுக்கு மத்திய அரசின் இலக்கு!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  10 Aug 2023 4:56 AM GMT

அங்கன்வாடி சேவைகளின் கீழ் நாடு முழுவதிலும் உள்ள 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள், கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் ஆகியோருக்கு ஊட்டச்சத்து மற்றும் சுகாதாரக் கல்வி வழங்கப்படுகிறது.

அங்கன்வாடி திட்டத்தின் கீழ் 75.58 லட்சம் கர்ப்பிணிப் பெண்கள், 46.87 லட்சம் பாலூட்டும் தாய்மார்கள், 0 முதல் 6 மாதம் வரையிலான 40.87 லட்சம் குழந்தைகள், 6 மாதம் முதல் 3 வயது வரையிலான 4.19 கோடி குழந்தைகள், 6 மாதம் முதல் 3 வயது வரை 4.19 கோடி குழந்தைகள், 3 வயது முதல் 2 வயது வரை 4.29 கோடி குழந்தைகள் என மொத்தம் 10.3 கோடி பயனாளிகள் பதிவு செய்துள்ளனர்.

ஓராண்டில் 300 நாட்களுக்கு ஊட்டச்சத்து விதிமுறைகளின்படி துணை ஊட்டச்சத்து வழங்கப்படுகிறது. 3 முதல் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு ஆரம்பகால குழந்தைப் பருவ பராமரிப்பு மற்றும் கல்வி வழங்கப்படுகிறது.

இது அங்கன்வாடி சேவைகளின் கீழ் ஆறு சேவைகளில் ஒன்றாகும். தேசிய கல்விக் கொள்கை 2020-ன் பரிந்துரைகளை அடைய, தரமான குழந்தைப் பருவ வளர்ச்சி, பராமரிப்பு மற்றும் கல்வியை அனைவருக்கும் வழங்குவதற்காக, விளையாட்டு அடிப்படையிலான, செயல்பாட்டு அடிப்படையிலான கற்றல் கற்பித்தலைப் பயன்படுத்தும் ஒரு புதிய திட்டமான 'போஷன் பி பதாய் பி' (ஊட்டச்சத்துடன் கல்வி) தொடங்கப்பட்டுள்ளது.

Input From: ANI

Next Story
கதிர் தொகுப்பு
Trending News