தடை செய்யப்பட்ட 14,000 சீன கத்திகள் - தமிழகத்தில் இருந்தும் ஆர்டர் போயிருக்காம்: வெளியான பகீர் தகவல்!

By : Kathir Webdesk
டெல்லியில் தடை செய்யப்பட்ட 14,000 சீன கத்திகளை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். அவற்றை விலைக்கு வாங்கிய தமிழ்நாடு, ஹைதராபாத் மற்றும் குஜராத் மாநில வாடிக்கையாளர்களிடம் விசாரிக்க காவல்துறை முடிவு செய்துள்ளது.
முதற்கட்ட விசாரணையில் தடை செய்ய அந்தக் கத்திகள் ஆன்லைன் வர்த்தகத்தளங்களின் மூலம் ஆர்டர் செய்து வரவழைக்கப்பட்டு, இறக்குமதி வரி செலுத்தி பெறப்பட்டவை என்பதும் தெரிந்தது.
இதனைத் தொடர்ந்து போலீஸார் அப்பகுதியைச் சேர்ந்த வசீம், நதீம் ஆகியோரை விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்தனர். அவர்களிடம் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட 14,000 கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த கத்திகளை, டெல்லியின் மயாங், ஆஷிஷ் சாவ்லா ஆகியோர் ஆன்லைன் வர்த்தகத்தளங்களில் ஆர்டர் செய்து வாங்கியுள்ளனர். இதுவரை இவர்கள் இருவரும் 19,000 கத்திகளை இருவரும் சீனவிலிருந்து வாங்கியதும் தெரிந்தது.
இவர்களிடமிருந்தே வசீம், நதீம் மற்றும் யூசூப் ஆகியோர் வாங்கி தமது ஹைதராபாத், குஜராத் வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்துள்ளனர்.தமிழகத்தில் இருந்தும் பலர் இவர்களிடம் சீன கத்திகளை விலைக்கு வாங்கியது விசாரணையில் தெரிந்துள்ளது. இவர்கள் அனைவரின் மீதும் டெல்லி போலீஸார் வழக்குகளைப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Input From: Hindu
