கேரளா: கொரோனாவுக்கு பயந்து 149 பேர் தற்கொலை ! அதிர்ச்சி தகவல் !
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலையின் தீவிரம் குறைந்து வந்த நிலையிலும் கேரளாவில் தினசரி பாதிப்புகள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. சமீப காலமாக தொற்று எண்ணிக்கை குறைந்து வருகிறது.
By : Thangavelu
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலையின் தீவிரம் குறைந்து வந்த நிலையிலும் கேரளாவில் தினசரி பாதிப்புகள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. சமீப காலமாக தொற்று எண்ணிக்கை குறைந்து வருகிறது.
இந்நிலையில், கேரள சட்டப்பேரவையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ., வினோத் எழுப்பிய கேள்விக்கு சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் அளித்துள்ள பதிலில், கேரளாவில் 41 கர்ப்பிணிகள் கொரோனா தொற்றுக்கு இறந்துள்ளது. 149 கொரோனா நோயாளிகள் பயந்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக கூறினார்.
மேலும், கேரள மக்களின் ஒரு பெரும் பகுதியினர் கொரோனா தொற்றுக்கு எதிரான எதிர்ப்பு சக்தியை தற்போது அடைந்துள்ளனர். இதனை மாநில அரசின் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றது. இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தி கொண்ட பல்வேறு மக்களிடையே நடத்தப்பட்ட ஆய்வில் மிகவும் அதிகளவிலான கடலோர மக்களிடம் 93.3 சதவீதம் பேரிடம் நோய் எதிர்ப்பாற்றல் காணப்பட்டது என்று அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறியுள்ளார்.
Source, Image Courtesy: Daily Thanthi