Kathir News
Begin typing your search above and press return to search.

மத்திய அரசின் உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ் ரூ.1,368 கோடி முதலீடு - 4000 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு உறுதி!

மத்திய அரசின் உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ் ரூ.1,368 கோடி முதலீடு - 4000 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு உறுதி!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  29 Jun 2022 8:46 AM GMT

உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை திட்டத்தின் 2-வது பகுதியில், 15 நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இரண்டாவது பகுதியில் பெறப்பட்ட 19 விண்ணப்பங்களை மதிப்பீடு செய்த பின்னர், ரூ.1,368 கோடி முதலீடு செய்யும் வகையில், 15 நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

இதில், உறுதி செய்யப்பட்ட, ரூ.908 கோடி முதலீட்டில் குளிர்சாதன உதிரிபாகங்களை தயாரிக்கும் 6 நிறுவனங்களும், ரூ.460 கோடி முதலீட்டில் எல்இடி உதிரிபாகங்களை தயாரிக்கும் 9 நிறுவனங்களும் தேர்வாகியுள்ளன. இந்த 15 நிறுவனங்களும், 5 வருடங்களில், ரூ.25,583 கோடி மதிப்புடைய பொருட்களை உற்பத்தி செய்வதுடன், கூடுதலாக 4 ஆயிரம் பேருக்கு நேரடி வேலைவாய்ப்புகளை உருவாக்கும்.

தில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய, தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான துறையின் கூடுதல் செயலர் அனில் அகர்வால், உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகையின் விளைவாக, இந்த பிரிவுகளில் உள்நாட்டு உற்பத்தியின் மதிப்பு தற்போதுள்ள 15-20 சதவீதததிலிருந்து 75-80 சதவீதமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை, தரநிலைகள், தரக்கட்டுப்பாட்டு ஆணைகள் உள்ளிட்ட ஒழுங்குமுறை நடவடிக்கைகள் இந்தியாவில் தயாரிப்போம் மற்றும் தற்சார்பு இந்தியா திட்டங்களின்கீழ், குளிர்சாதனம் மற்றும் எல்இடி விளக்குகள் உற்பத்தியில் மிகப்பெரிய ஊக்கத்தை அளித்துள்ளன. முதற்கட்டத்தில், 52 விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில், ரூ.5,264 கோடி முதலீடு செய்யும் வகையில் 46 விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டன என்றார்.

Inputs From: The Hindu

Next Story
கதிர் தொகுப்பு
Trending News