கிறிஸ்மஸ் பண்டிகைக்கான மது விற்பனையில் கேரளா படைத்துள்ள சாதனை! அசால்ட்டா அடிச்சிருக்காங்க!
150 crore was spent; Record liquor sales for Christmas
By : Muruganandham
கேரளாவில் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டத்தின் போது 215 கோடி ரூபாய்க்கு மதுபானம் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக மாநில அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுவும் கிறிஸ்துமஸ் தினத்தன்று மட்டுமே ரூ.73 கோடி மதிப்புள்ள மதுபானம் விற்பனை செய்யப்பட்டு பெவ்கோ சாதனை படைத்துள்ளது. பெவ்கோவைத் தவிர, நுகர்வோர் மையங்கள் மூலமாகவும் விற்பனை நடைபெற்றது. பெவ்கோ விற்பனை நிலையங்கள் மூலம் ரூ.65 கோடிக்கும், கன்ஸ்யூமர் ஃபெட் விற்பனை நிலையங்கள் மூலம் ரூ.8 கோடிக்கும் மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டன.
கேரள அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் பீவ்கொ நிறுவனம் கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது விற்பனை செய்யப்பட்ட மதுபானத்தின் மதிப்பு குறித்த தகவலை வெளியிட்டுள்ளது.
டிச., 24ல், நுகர்பொருள் வாணிப கழகம் மூலம், 11.5 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடந்தது. கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, மதுபானங்கள் கழகத்தில், 65.88 கோடி ரூபாய்க்கு மது விற்பனை செய்துள்ளது. கடந்த ஆண்டு ரூ.55 கோடிக்கு விற்பனையானது. திருவனந்தபுரம் பவர்ஹவுஸ் விற்பனை நிலையத்திலேயே அதிக விற்பனை நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இங்கு மட்டும் ரூ.73 லட்சம் மதிப்புள்ள மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டன.
24-25 நாட்களில் ரூ.150 கோடிக்கு மேல் மதுபானத்தை மலையாளிகள் குடித்துள்ளனர். திருவனந்தபுரத்திற்கு அடுத்தபடியாக சாலக்குடியில்தான் கிறிஸ்துமஸ் விற்பனை அதிகம். இங்கு ரூ.70.72 லட்சம் மதிப்புள்ள மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டன. பின்னர் இரிங்கலக்குடாவில் அதிக விற்பனையானது. இங்கு மட்டும் ரூ.63.60 லட்சம் மதிப்புள்ள மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டன.