Kathir News
Begin typing your search above and press return to search.

இரண்டாவது முறையாக ரூ.1.5 லட்சம் கோடிக்கு மேல் வசூலான ஜிஎஸ்டி: தொடர்ந்து முன்னேற்றப் பாதையில் இந்தியா பொருளாதாரம்!

இரண்டாவது முறையாக ரூ.1.5 லட்சம் கோடிக்கு மேல் வசூலான ஜிஎஸ்டி: தொடர்ந்து முன்னேற்றப் பாதையில் இந்தியா பொருளாதாரம்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  2 Nov 2022 3:00 AM GMT

ஜிஎஸ்டி வரி வருவாய்

அக்டோபர் 2022-க்கான ஜிஎஸ்டி வரி வருவாய் ரூ.1,51,718 கோடியாக உள்ளது. இதில் மத்திய அரசின் ஜிஎஸ்டி வருவாய் ரூ.26,039 கோடியாகவும், மாநில அரசுகளின் ஜிஎஸ்டி வருவாய் ரூ.33,396 கோடியாகவும், மத்திய- மாநில அரசுகளின் ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி வருவாய் ரூ.81,778 கோடியாகவும், செஸ் வரிவருவாய் ரூ.10,505 கோடியாகவும் உள்ளது.

2-வது அதிகபட்ச வருவாய்

ஏப்ரல் 2022க்கு அடுத்தபடியாக 2-வது அதிகபட்ச வருவாய் ஈட்டிய மாதமாக அக்டோபர் 2022 திகழ்கிறது. அதேபோல் ரூ.1.50லட்சம் கோடிக்கு மேல் மொத்த ஜிஎஸ்டி வருவாய் வசூலாகியிருப்பது, இது 2-வது முறையாகும். மேலும், உள்நாட்டு பணப்பரிமாற்றத்திலும், ஏப்ரல் 2022க்கு அடுத்தபடியாக, அக்டோபர் 2022 அதிகபட்ச வருவாய் ஈட்டியிருக்கிறது. இதுவரை மாதாந்தர ஜிஎஸ்டி வரி வருவாய், ரூ1.4லட்சம் கோடியைத் தாண்டிய 9 மாதங்களில், அக்டோபர் மாதம் 8-வது இடத்தைப் பிடித்துள்ளது.

தமிழகம் 4ம் இடம்

மாநிலங்களைப் பொருத்தவரை, ரூ.23,037 கோடி ஜிஎஸ்டி வருவாயை ஈட்டி, அக்டோபர் மாதம் அதிக வருவாய் ஈட்டிய மாநிலங்களின் பட்டியலில் மகாராஷ்டிரா முதல் இடத்தில் உள்ளது. அக்டோபர் 2022க்கான தமிழகத்தின் ஜிஎஸ்டி வரிவருவாய் ரூ.9,540 கோடியாகவும், புதுச்சேரியின் ஜிஎஸ்டி வரிவருவாய் ரூ.204 கோடியாகவும் உள்ளது.

Input From: Gov.in

Next Story
கதிர் தொகுப்பு
Trending News