Kathir News
Begin typing your search above and press return to search.

15வது நிதிக்குழு இறுதி அறிக்கையை பிரதமரிடம் சமர்பித்த குழுவினர்.!

15வது நிதிக்குழு இறுதி அறிக்கையை பிரதமரிடம் சமர்பித்த குழுவினர்.!

15வது நிதிக்குழு இறுதி அறிக்கையை பிரதமரிடம் சமர்பித்த குழுவினர்.!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  17 Nov 2020 4:39 PM IST

மத்திய அரசிடம் உள்ள அதிக நிதி வருவாயிலிருந்து மாநில அரசுக்குத் தேவையான நிதிகளை வழங்க பரிந்துரை செய்வதுதான் நிதிக்குழு. மத்திய மாநில அரசுகளுக்கிடையிலான நிதி ஏற்றத்தாழ்வு எல்லா கூட்டாச்சிகளிலும் இருக்கக்கூடிய ஒன்றாகும். மத்திய அரசுகளிடம் அதிகமான அதிகமான நிதி வருவாய்களும் மாநில அரசுகளிடம் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கான செலவுப் பொறுப்புகளுக்கு இருக்கின்றன.

எனவே மாநிலங்களுக்கு நிதி அளிக்க வேண்டிய கட்டாயம் மத்திய அரசுக்கு உள்ளது. மத்திய அரசின் வரி வருவாயில் எவ்வளவு தொகை மாநிலங்களுக்கு கொடுக்க வேண்டும் என்பதை நடுநிலையாக தீர்மானிக்க வேண்டி நிதி குழு அமைக்கப்பட்டது.

இந்நிலையில், நாட்டின் 15வது நிதி குழு 5 ஆண்டுகளுக்கான நிதி பகிர்வு இறுதி அறிக்கையை பிரதமர் மோடியிடம் வழங்கியுள்ளது. என்.கே.சிங் தலைமையில் செயல்பட்டு வரும் 15வது நிதி குழு மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையே மத்திய வரிகளை பகிர்ந்து அளிப்பது பற்றி பரிந்துரைகளை வழங்கும்.

இந்நிலையில், இந்த நிதி குழு, 2020 21ம் ஆண்டுக்கு மத்திய வரியில் 41 சதவீதம் அளவுக்கு மாநிலங்களுக்கு வழங்க வேண்டும் என அரசுக்கு மாநிலங்களுக்கு வழங்க வேண்டும் என அரசுக்கு பரிந்துரைத்து உள்ளது.

இதுபோக ஒரு சதவீதம் ஜம்மு மற்றும் காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய புதியதாக உருவாக்கப்பட்ட யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு சார்பில் நிதி பகிர்வுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் இந்த குழு இன்று அறிக்கையை வழங்குகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News