Kathir News
Begin typing your search above and press return to search.

அடுத்த 5 ஆண்டுகளில் ₹1.97 இலட்சம் கோடி மதிப்பில் ஊக்க திட்டம்! 4.2 இலட்சத்திற்கும் மேல் வேலைவாய்ப்புகள் சாத்தியம்!

அடுத்த 5 ஆண்டுகளில் ₹1.97 இலட்சம் கோடி மதிப்பில் ஊக்க திட்டம்! 4.2 இலட்சத்திற்கும் மேல் வேலைவாய்ப்புகள் சாத்தியம்!

அடுத்த 5 ஆண்டுகளில் ₹1.97 இலட்சம் கோடி மதிப்பில் ஊக்க திட்டம்! 4.2 இலட்சத்திற்கும் மேல் வேலைவாய்ப்புகள் சாத்தியம்!

Muruganandham MBy : Muruganandham M

  |  3 Jan 2021 7:30 AM GMT

ஸ்டார்ட் அப் இந்தியா திட்டத்தின் கீழ் 29 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 586 மாவட்டங்களில் புதுமையான நிறுவனங்களுக்கான கொள்கைகள் அமல்படுத்தப்பட்டு 4.2 இலட்சத்திற்கும் அதிகமான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படுகின்றன.

40,000-க்கும் அதிகமான அங்கீகரிக்கப்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்களுடன் அதிக வேலைவாய்ப்பு மற்றும் தன்னிறைவை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தும் இந்தியா ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு உகந்த சூழ்நிலையை உருவாக்கி மூன்றாவது மிகப்பெரும் நாடாக வளர்ச்சி அடைந்துள்ளது.

உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் நோக்கத்தோடு அடுத்த ஐந்து ஆண்டுகளில் ரூ.1.97 இலட்சம் கோடி மதிப்பில் வாகனங்கள் மற்றும் வாகன உதிரி பாகங்கள், மருந்து, தொலைத்தொடர்பு, உணவு பொருள்கள் உள்ளிட்ட 13 துறைகளில் உற்பத்தி சார்ந்த ஊக்கத் தொகைத் திட்டத்தை அரசு அறிமுகப்படுத்தியது.

பெருந்தொற்றுக்கு இடையே இந்தியாவில் முதலீடு செய்பவர்களுக்கு சூழலை ஏற்படுத்துவதற்காக இந்திய அரசின் அமைச்சகங்களின்“செயலாளர்களின் அதிகாரம் அளிக்கப்பட்ட குழு மற்றும் திட்ட மேம்பாட்டு செல்கள் உருவாக்கப்பட்டன.

நாட்டில் புதிய தொழிற்சாலைகளைத் தொடங்க ஒற்றைச் சாளர முறையில் அனுமதி அளிக்கப்படுவதற்காக மத்திய முதலீட்டு அனுமதி பிரிவு தொடங்கப்பட உள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட 15 மாநிலங்களில் 2021 ஏப்ரல் மாதத்தில் இதனை அறிமுகப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

மாநிலங்கள் முழுவதும் உள்ள தொழில் பகுதிகள்/தொகுப்புகள் குறித்த ஜிஐஎஸ் உதவியுடன் கூடிய தரவுகளைக் கொண்ட தொழிலியல் தகவல் முறை உருவாக்கப்பட்டது. 4.76 இலட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பில் அமைந்துள்ள 3390 தொழில் பூங்காக்கள்/சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் உள்ளிட்டவை இந்த முறையில் இணைக்கப்பட்டுள்ளன.

தற்சார்பு இந்தியாவை உருவாக்கும் முயற்சியில் ஒவ்வொரு மாவட்டத்தின் சிறப்பு தன்மையை அறிந்து அதில் கவனம் செலுத்தும் ‘ஒரு மாவட்டம் ஒரு உற்பத்திப் பொருள்' அணுகுமுறை உத்திர பிரதேசம் போன்ற ஒரு சில மாநிலங்களில் செயல்படுத்தப்படுகிறது. இதனை தேசியமயமாக்குவதன் மூலம் 739 மாவட்டங்களில் மொத்தம் 739 பொருள்களில் கவனம் செலுத்த முடியும்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News