Kathir News
Begin typing your search above and press return to search.

'2வது அலை இன்னும் முடியவில்லை, மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்' : ஹர்ஷவர்தன் எச்சரிக்கை!

2வது அலை இன்னும் முடியவில்லை, மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் : ஹர்ஷவர்தன் எச்சரிக்கை!
X

ParthasarathyBy : Parthasarathy

  |  29 Jun 2021 2:23 PM GMT

நமது நாட்டின் மத்திய சுகாதார துறை அமைச்சர் ஹர்ஷவரதன் இன்று காணொளி காட்சி மூலம் கொரோனாவின் தாக்கம் மற்றும் கொரோனாவில் இருந்து நம்மை காத்து கொள்ளும் வழி குறித்து டெல்லி அதிகாரிகளுடன் கலந்துரையாடினார். மேலும் டெங்கு, மலேரியா போன்ற நோய்கள் டெல்லியில் வராமல் கட்டுப்படுத்தும் வகை குறித்தும் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இதன் பிறகு செய்தியாளர்களிடம், கொரோனா தொற்றின் இரண்டாவது அலை இன்னும் முடியவில்லை எனவே,மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று ஹர்ஷ வர்தன் கூறினார் .


காணொளி காட்சி முடிந்த பின்னர் ஹர்ஷ வரதன் செய்தியாளர்களிடம் கூறியதாவது " டெல்லியில் மலேரியா மற்றும் டெங்குவால் பாதிக்கப்படும் நபர்களை கண்டறிந்து அவர்களுக்கு வேண்டிய மருத்துவ உதவிகளை கட்டாயம் வழங்க வேண்டும். இவ்வாறு இந்த நோயால் பாதிக்கப்படும் நபர்களை கண்டறிந்து அவர்களை இந்த நோயிலிருந்து குணம் பெற நாம் உதவினால் டெல்லியில் மலேரியா, டெங்கு போன்ற நீரினால் பரவும் நோயை வேரோடு ஒழிக்க முடியும்.


கொரோனா பாதிப்பின் இரண்டாவது அலை இன்னும் முடியவில்லை. கடந்த சில வாரங்களாக இந்தியாவில், கொரானாவின் தினசரி பாதிப்பு அதிகரிக்க துவங்கி உள்ளது. ஆனால் இதை அறியாத பொது மக்கள் இரண்டாவது அலை முடிந்துவிட்டதாக எண்ணி பலரும் சகஜ நிலைக்கு திரும்பி வருகின்றனர். பொது மக்கள் அனைவரும் விழிப்புடன் செயல்பட்டு கொரோனா நோயிற்கான விதிமுறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும். மேலும் கொரோனாவில் இருந்து நம்மை காத்துக்கொள்ள அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்." என்று அவர் கூறினார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News