பஜ்ரங்கதள் நிர்வாகி கொலையில் 8 பேர் அதிரடியாக கைது!
By : Thangavelu
கர்நாடக மாநிலம், சிவமொக்கா மாவட்டத்தை சேர்ந்தவர் ஹர்ஷா 24, இவர் அம்மாவட்டத்தில் பஜ்ரங்தள் அமைப்பில் முக்கிய நிர்வாகியாக செயல்பட்டு வந்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு நேரத்தில் டூ வீலரில் சென்ற ஹர்சாவை 10க்கும் மேற்பட்ட முஸ்லிம் கும்பல் பயங்கர ஆயுதங்களால் வெட்டிபடுகொலை செய்துவிட்டு தப்பியோடியது. இந்த சம்பவம் கர்நாடகா மாநிலம் முழுவதும் எதிரொலித்தது. இதற்கு பஜ்ரங்கதள் அமைப்பை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி பாஜகவினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். கொலை செய்த கும்பலை உடனடியாக கைது செய்து தண்டனை வழங்க வேண்டும் என்ற கோஷங்களை எழுப்பி வந்தனர்.
மேலும், ஹர்ஷாவின் இறுதி ஊர்வலத்தின் போது முஸ்லிம் தெரு வழியாக சென்றபோது அங்கிருந்தவர்கள் தாக்குதலில் ஈடுபட்டனர். இதனால் இறுதி ஊர்வலம் வன்முறையாக மாறியது. இதில் பல பஜ்ரங்கள் தொண்டர்கள் தாக்கப்பட்டனர். அங்கு இருந்த கார், பேருந்துகளை சிலர் தீ வைத்து எரித்தனர். மாவட்டத்தில் பதற்றத்தை தணிப்பதற்காக 144 தடை உத்தரவும் போடப்பட்டது.
இதனிடையே ஹர்சா கொலையில் தொடர்புடைய 6 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது இன்று மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த படுகொலையில் இதுவரைக்கும் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களின் விவரங்கள் வருமாறு: முகமது காஷிப், சையது நதீம், ஆசிஃபுல்லா கான், ரீஹன் கான், நீஹல் மற்றும் அப்துல் ஆஃப்னன் என்ற 8 பேரிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணையை தொடங்கியுள்ளனர். இந்த கொலையில் மேலும் சிலர் கைதாக இருப்பதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
Source, Image Courtesy: Daily Thanthi