Kathir News
Begin typing your search above and press return to search.

தனது பணிகளில் இதுவரை இல்லாத அளவில் மகத்தான சாதனை படைத்த ஆண்டு 2020: இந்திய ரயில்வே பெருமிதம்.!

தனது பணிகளில் இதுவரை இல்லாத அளவில் மகத்தான சாதனை படைத்த ஆண்டு 2020: இந்திய ரயில்வே பெருமிதம்.!

தனது பணிகளில் இதுவரை இல்லாத அளவில் மகத்தான சாதனை படைத்த ஆண்டு 2020: இந்திய ரயில்வே பெருமிதம்.!

Rama SubbaiahBy : Rama Subbaiah

  |  6 Dec 2020 9:11 AM GMT

ஏப்ரல் 2019 - மார்ச் 2020வரையான ஆண்டில், இந்திய ரயில்வே மிகச் சிறந்த பாதுகாப்பு சாதனையைப் பதிவு செய்துள்ளது. இந்த ஆண்டில் 01.04.2019 முதல் 08.06.2020 வரை எந்தவொரு ரயில் விபத்திலும் எந்தவொரு ரயில் பயணிக்கும் உயிரிழப்பு ஏற்படவில்லை. அதேபோல சரக்கு ரயில்கள் எப்போதுமில்லாத வகையில் இந்த ஆண்டுதான் அதிக அளவிலான சரக்குகளை கையாண்டு சாதனை படைத்துள்ளது.

166 ஆண்டுகளுக்கு முன்பு 1853ஆம் ஆண்டில் இரயில் போக்குவரத்து அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் 2019-2020ஆம் ஆண்டில் முதல் முறையாக இந்த குறிப்பிடத்தக்க சாதனை அடையப்பட்டுள்ளது.

கடந்த 15 மாதங்களில் ஒரு பயணி கூட ரயில் விபத்தில் இறக்கவில்லை என்பது அனைத்து வகையிலும் பாதுகாப்பு செயல்திறனை மேம்படுத்திய இந்திய ரயில்வேயின் தொடர் முயற்சியேயாகும்.

இதற்கு காரணம் மனிதர்களால் இயக்கப்படும் 1274 லெவல் கிராசிங்குகள் 2019-2020 ஆம் ஆண்டில் அகற்றப்பட்டுள்ளன. 2018-19ஆம் ஆண்டை ஒப்பிடும்போது 631 மனிதக் காவலர்களைக் கொண்ட லெவல் கிராசிங்குகள் மட்டுமே அகற்றப்பட்டன என்பது குறிப்பிடதக்கது. இது கடந்த ஆண்டில் செய்யப்பட்டதை விட இரட்டிப்பாகும். இது மனிதர்களால் இயங்கும் லெவல் கிராசிங்குகளை அகற்றுவதில் உச்சபட்ச எண்ணிக்கையாகும்.

ரயில்வே துறையில் கிராசிங்குகளில் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக 2019-20 ஆம் ஆண்டில் மொத்தம் 1309 சாலை மேம்பாலங்களும் மற்றும் சுரங்கப்பாதை பாலங்களும் கட்டப்பட்டன. அதற்கு முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது இது 37 சதவீதம் கூடுதலாகும். 2019 -2020 கால ஆண்டில் இதுவரை இல்லாத அளவு இரயில்வே தண்டவாளங்கள் அதிகபட்சமாக 5181 கி.மீ புதுப்பிக்கப்பட்டுள்ளன.

ஆனால் 2018- 19கால ஆண்டில் 4,265 கி.மீ அளவில் தான்தண்டவாளங்கள் புதுப்பிக்கப்பட்டது , எனவே சென்ற முந்தைய விட கூடுதலாக 20% ரயில்வே பாதைகள் புதுப்பிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல இந்திய ரயில்வே 2020-இல் அதிக அளவில் சரக்கை கையாண்டது. இது இதற்கு முந்தைய வருடத்துடன் ஒப்பிடும் போது இந்த வருடம் நவம்பரில் 9% அதிகம் ஆகும்.

2020 நவம்பரில் இந்திய ரயில்வே 109.68 மில்லியன் டன் அளவிற்கு சரக்குகளைக் கையாண்டுள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலத்தை விட 9 சதவீதம் (100.96 மில்லியன் டன்)அதிகமாகும். சரக்குப் போக்குவரத்தின் மூலமாக நவம்பர் மாதம் ரூபாய் 10657.66 கோடியை ஈட்டியுள்ளது. இது கடந்த ஆண்டை விட 4 சதவீதம் அதிகமாகும்.

ரயில்வே சரக்கு போக்குவரத்தை ஈர்க்கும் வகையில் பல்வேறு சிறப்புச் சலுகைகள் வழங்கப்படுகின்றன. இது நரேந்திர மோடி அரசின் நிர்வாகத் திறனுக்கு ஒரு உதாரணமாக திகழ்கிறது .


Next Story
கதிர் தொகுப்பு
Trending News