Kathir News
Begin typing your search above and press return to search.

2021 இறுதிக்குள் அனைவருக்கும் தடுப்பூசி: மக்களின் முழு ஒத்துழைப்புடன் இது சாத்தியமே!

2021 இறுதிக்குள் அனைவருக்கும் தடுப்பூசி: மக்களின் முழு ஒத்துழைப்புடன் இது சாத்தியமே!
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  1 Jun 2021 5:52 PM IST

இன்றைய சூழ்நிலையில் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்று நோயை கட்டுக்குள் கொண்டு வருவதற்கும் பல்வேறு வகையில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால் செயல் நடைமுறையில் இது அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி போடுவதால் மட்டுமே இத்தகைய கட்டுப்பாடு சாத்தியம்.

ஆகவே தற்போது மத்திய அரசு தீவிர கண்காணிக்கும் பணியை மேற்கொண்டுள்ளது. குறிப்பாக அனைத்து மக்களுக்கும் 2021க்குள் தடுப்பூசி போடுவதை உறுதி செய்துள்ளது. 2021 இறுதிக்குள் முழு தகுதியுள்ள மக்களுக்கும் தடுப்பூசி போடப்படும் என்று மத்திய அரசு கூறி உள்ளது. மக்களின் முழு ஒத்துழைப்புடன் மட்டும் தான் இத்தகைய சிகிச்சை சாத்தியம் என்றும் மத்திய அரசு மேலும் கூறியது.


இந்திய நாட்டில் உள்நாட்டு தடுப்பூசி உற்பத்தியாளர்களான SII, பாரத் பயோடெக் மற்றும் ரெட்டீஸ் லேப் ஆகியவற்றிலிருந்து மேற்கொள்ளப்படும் தடுப்பூசி உற்பத்தி, 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போட போதுமானதாக இருக்கும் என்று சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா நீதிபதிகள L.N.ராவ் மற்றும் S.R.பட் ஆகியோரின் மேற்பார்வையில் மேற்கொள்ளப்பட்ட ஒரு அமர்வில் தெரிவித்தார்.


தவிர, தடுப்பூசிகளை வழங்குவதற்காக ஃபைசர் போன்ற வெளிநாட்டு நிறுவனங்களுடன் மத்திய அரசு தற்போது பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. மத்திய அரசாங்கம் இதில் வெற்றி பெற்றால், ஆண்டு இறுதிக்குள் தடுப்பூசி போடுவதற்கான கால அளவை சற்று மாற்றி இந்த ஆண்டிற்கு முன்னதாகவே அனைத்து மக்களுக்கும் தடுப்பூசிகளை நிச்சயம் கொண்டு போய் சேர்க்க முடியும் என்றும், முன்னதாகவே அனைத்து தகுதியுள்ள மக்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்படும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News