மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2022, 23ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.
By : Thangavelu
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2022, 23ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.
4வது முறையாக மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். கடந்த 2019ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2 மணி நேரம் 15 நிமிடம் பட்ஜெட் உரையை வாசித்தார். அதனையடுத்து 2020ம் ஆண்டின் பட்ஜெட்டின்போது 2 மணி நேரம் 42 நிமிடம் உரையாற்றினார். அதே போன்று 2021ம் ஆண்டு 1 மணி நேரம் 51 நிமிடம் உரையாற்றினார்.
இந்நிலையில், இந்த நிதியாண்டுக்கான 2022, 23ல் பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார். இதில் பல்வேறு துறைகளுக்கு நிதி பற்றிய அறிவுப்புகள் ஒவ்வொன்றாக வாசித்து வருகிறார். இந்த பட்ஜெட் மிக முக்கியத்துவம் வாய்ந்தவையாக பார்க்கப்படுகிறது.
Souce: Puthiyathalaimurai
Image Courtesy: ANI