2024-க்குள் உலகத்தரம் வாய்ந்த நெடுஞ்சாலைகள் : அசத்தும் நிதின் கட்கரி!
By : Janani
வெள்ளிக்கிழமை அன்று மத்திய சாலை போக்குவரத்துக்கு மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, 2024 ஆண்டில் 60,000 கிலோமீட்டர் கொண்ட உலகத் தரம் வாய்ந்த நெடுஞ்சாலைகளைத் தினசரி 40 கிலோமீட்டர் என்ற கணக்கில் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
"இந்தியச் சாலை மேம்பாடு" குறித்த 16 வது ஆண்டு மாநாட்டில் பேசிய போது, "இந்தியாவில் 63 லட்சம் கிலோமீட்டர் கொண்ட சாலை இணைப்பு உள்ளது, இது உலகில் இரண்டாவது பெரியது ஆகும். இந்தியப் பொருளாதாரத்தில் சாலை உள்கட்டமைப்பு வசதி முக்கிய பங்கினை பெறுகின்றது," என்று கட்கரி தெரிவித்தார்.
மேலும் தேசிய உள்கட்டமைப்பு பைப்லைன்(NIP) மூலம் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கு அரசு 111 லட்சம் கோடியை அரசாங்கம் முதலீடு செய்து வருவதாகவும், ஆண்டாண்டிற்குரிய உள்கட்டமைப்பு மூலதன செலவினங்களை 34 சதவீதம் அதிகரித்து 5.54 லட்சம் கோடியாக உயர்த்தியுள்ளதாக கட்கரி வலியுறுத்தினார்.
நாக்பூர் தொகுதியில் இருந்து மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்கரி, மே 26 2014 இல் பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்றதில் இருந்து சாலை போக்குவரத்துக்கு மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக பணியாற்றிவருகிறார். மேலும் அவர் கப்பல் போக்குவரத்துக்கு அமைச்சராகவும் மற்றும் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களில் அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.
Source: ஸ்வராஜ்யா