Kathir News
Begin typing your search above and press return to search.

தாவூத் இப்ரம் உதவியாளர் இக்பால் மிர்ச்சியின் ரூ. 22 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கம்.!

தாவூத் இப்ரம் உதவியாளர் இக்பால் மிர்ச்சியின் ரூ. 22 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கம்.!

தாவூத் இப்ரம் உதவியாளர் இக்பால் மிர்ச்சியின் ரூ. 22 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கம்.!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  22 Oct 2020 9:24 PM IST

பணமதிப்பிழப்பு தடுப்பு சட்டம் 2002 (PMLA) இன் பிரிவு 5 ன் கீழ் தாவூத் இப்ரம் உதவியாளர் இக்பால் மிர்ச்சி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான ரூ. 22.42 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் மற்றும் ஏழு வங்கிக் கணக்குகள் மற்றும் அசையா சொத்துக்களை அமலாக்க (ED) துறையால் தற்காலிகமாக அனைத்துச் சொத்துகளும் முடக்கப்பட்டுள்ளது. ED உடன் இணைக்கப்பட்ட சொத்துக்களில், மும்பையில் ஒரு ஹோட்டல், இரண்டு பங்களாக்கள் மற்றும் பஞ்சகனியில் உள்ள 3.5 ஏக்கர் நிலம் ஆகியவை மறைந்த தீவிரவாதியான இக்பால் மிர்ச்சியின் உறவினருக்கு சொந்தமானவை.



தீவிரவாதியான இக்பால் மிர்ச்சி தனது குற்றங்களின் மூலம் ஈட்டிய வருமானத்தை மும்பையில் உள்ள ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்ததாகவும், இதற்காக அவர் பல ஷெல் நிறுவனங்களை அமைத்ததாகவும் ஒரு வழக்கை ED- 2019 இல் எடுத்துக் கொண்டது. இதில் மேலும் DHFL விளம்பரதாரர்களான கபில் மற்றும் தீரஜ் வாதவன் ஆகியோருக்கு தொடர்பு இருந்ததாகவும் டைம்ஸ் நவ் நிறுவனத்தின் உரிமையாளர் பவடோஷ் சிங் தெரிவித்துள்ளது.


மேலும் டைம்ஸ் நவ் நிறுவனம் கூறுகையில், "ஒரு வருட காலத்திற்குள் ரூ 800 கோடிக்கு மேல் சொத்துக்களை ED துறையால் இணைக்க முடிந்தது. இதில் 14 வணிக சொத்துக்கள் மற்றும் துபாயில் ஒரு ஹோட்டல் 237.04 கோடி ரூபாய். இந்த சொத்துக்கள் அனைத்தும் உண்மையில் இக்பால் மிர்ச்சியின் குடும்பத்தினரால் அவரது மனைவி மற்றும் இரண்டு மகன்கள் மற்றும் பல்வேறு ஷெல் நிறுவனங்கள் மூலம் வாங்கப்பட்டவை" என்றும் அந்த நிறுவனம் கூறியுள்ளது.

விசாரணையின் போது, ​​2008 மற்றும் 2010 க்கு இடையில் மும்பையில் ரியல் எஸ்டேட் தொழிலிற்கு பிறகு இக்பால் மிர்ச்சி தனக்கு கிடைத்த பணத்தை மாற்றவும், மோசடி செய்யவும் கபில் மற்றும் தீரஜ் வாதவன் உள்ளிட்ட ரியல் எஸ்டேட் டெவலப்பர்களை சந்திக்க சென்றதாக ED கண்டறிந்தது. பல்வேறு வழிகளில் முதலீடு செய்துள்ளார். மேலும் துபாயில் 5 நட்சத்திர ஹோட்டலையும் வாங்கியுள்ளார். தற்போது நடைபெற்று வரும் விசாரணையின் ஒரு பகுதியாக இக்பால் மிர்ச்சி மற்றும் குடும்பத்தின் அனைத்து சொத்துக்கள் மற்றும் சொத்துக்கள் மிக விரைவில் இணைக்கப்படும் என்று ED தரப்பில் தெரிவித்துள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News